மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பாமாயில் தேவை அதிகரிப்பு!

பாமாயில் தேவை அதிகரிப்பு!

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாமாயில் எண்ணெய்க்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து மொத்த விற்பனை நிலையங்களில் இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விலை 10 கிலோவுக்கு ரூ.16 வரை உயர்ந்துள்ளது. தற்போது 10 கிலோ பாமாயில் விலை ரூ.548 ஆக உள்ளது. அதேபோல ஆமணக்கு எண்ணெய் கிலோ ஒன்றுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. 1000 கிலோ ஆமணக்கு எண்ணெய் விலை ரூ.4,725 ஆக உள்ளது. ஆளிவிதை எண்ணெயின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நிலக்கடலை எண்ணெய் கொள்முதல் பெரியளவில் இல்லாததால் அதன் விற்பனை மட்டும் மந்தமாகவே இருந்தது. இதன் விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 10 கிலோ ரூ.850-க்கு விற்பனையாகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon