மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

தொழில்துறை உற்பத்தியில் சரிவு!

தொழில்துறை உற்பத்தியில் சரிவு!

கடந்த ஜூன் மாதத்தில் தொழில்துறையின் உற்பத்தி 0.1 சதவிகிதம் சரிந்துள்ளது. இதற்கு உற்பத்தி மற்றும் மூலதனப் பொருள்கள் துறையில் சரிவு ஏற்பட்டதே முக்கியக் காரணம் என்று தெரிகிறது. மேலும், சுரங்கத்துறை, மின்சக்தி உற்பத்தித்துறை, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்கள், நுகர்வோர் பொருள்கள் உற்பத்தி ஆகியவற்றின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை என்பதும் கூடுதல் காரணமாக உள்ளது.

தொழிற்சாலைகளின் உற்பத்தி 2016ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதன்முறையாக தொழில்துறையின் உற்பத்தி சரிந்துள்ளது. தொழில்துறை உற்பத்திக் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 3.4 சதவிகிதமும், மே மாதத்தில் 2.8 சதவிகிதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தி துறை ஜூன் மாதத்தில் 0.4 சதவிகிதம் சரிந்துள்ளது. சுரங்கத்துறை உற்பத்தி 0.4 சதவிகிமும் மின்சக்தித்துறை உற்பத்தி 2.1 சதவிகிதமும் சரிந்துள்ளது. மூலதனப் பொருள்களின் உற்பத்தி 6.8 சதவிகிதம் சரிந்துள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon