மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

சர்வதேசப் பீரங்கிப் போட்டி: சொதப்பிய இந்தியா!

 சர்வதேசப் பீரங்கிப் போட்டி: சொதப்பிய இந்தியா!

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேசப் பீரங்கிப் போட்டியில் இந்தியப் பீரங்கிகள் பழுதானதால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில், சர்வதேசப் பீரங்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 19 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக டி-90 வகை பீரங்கிகள் பங்குகொண்டன. சீனா 96-பி ரக பீரங்கிகளுடனும், பெலாரஸ் நவீன டி-72 ரக பீரங்கிகளுடனும், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் டி-72, பி-3 ரக பீரங்கிகளுடனும் பங்கேற்றன.

போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியப் பீரங்கிகள் இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின்போது பழுதாகி நின்றன. இந்தியாவின் இரண்டு பீரங்கிகளும் பழுதாகி நின்றதால் அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டுப் போட்டியிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது. ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்குப் போர் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவிவரும் வேளையில் சர்வதேச அளவிலான போட்டியில் பீரங்கி பழுதான சம்பவம் இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட சங்கடமாகவே பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon