மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

சர்க்கரை இறக்குமதி: வரிவிலக்கு இல்லை!

சர்க்கரை இறக்குமதி: வரிவிலக்கு இல்லை!

‘சர்க்கரை இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்க்கரை விநியோகத்தைச் சரியான விலையில் சீராக்க வேண்டும் என்ற நோக்கில், அக்டோபர் மாதம் முதல் சர்க்கரையை நொறுக்கும் பணிகளை முன்கூட்டியே தொடங்கச் சர்க்கரை ஆலைகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறைவான விலையில் சர்க்கரை இறக்குமதியைத் தடுக்கச் சர்க்கரைக்கான இறக்குமதி வரி 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

“உள்நாட்டில் சர்க்கரை இருப்பு தேவைக்கு ஏற்ப இருக்கிறது. ஏற்கெனவே வரிவிலக்குடன் 5 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய நாங்கள் அனுமதித்துள்ளோம். சர்க்கரை ஆலைகளும் சர்க்கரை நொறுக்கும் பணிகளை முன்கூட்டியே தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் சர்க்கரையின் இருப்பும் உறுதி செய்யப்படும். சர்க்கரையின் விலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். சர்க்கரை இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்க தற்போது எந்தத் திட்டமும் இல்லை” என்று ஆகஸ்ட் 12ஆம் தேதி மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

சர்க்கரைக்கான தேவை மாதத்துக்கு 2 முதல் 2.5 மில்லியன் டன்னாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon