மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

பிகினியில் பூஜா குமார்: கலாய்க்கும் ரசிகர்கள்!

பிகினியில் பூஜா குமார்: கலாய்க்கும் ரசிகர்கள்!

ஹாலிவுட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த பூஜா குமாரை விஸ்வரூபம், உத்தமவில்லன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியவர் கமல்ஹாசன். ஆனால், அவர் ஹாலிவுட்டுக்குப் போகும் முன்னரே தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். 2000ஆம் ஆண்டு வெளியான ‘காதல் ரோஜா’ படத்தில் பூஜா கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னரே ஹாலிவுட் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார்.

திரையுலகில் மார்க்கெட் குறைந்துவரும் நடிகைகள் ரசிகர்கள், திரையுலகினரின் கவனத்தைத் தங்கள் பக்கம் திரும்ப சமூக வலைதளங்களில் தங்களது பிகினி புகைப்படங்களை பதிவேற்றுவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஈஷா குப்தா, மந்த்ரா பேடி, திஷா பதானி, ரியா சென், ரூஹி சிங் என இந்த முறையை பின்பற்றும் நடிகைகளின் பட்டியல் நீளமானது. தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் பூஜா குமார். தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பிகினி உடை அணிந்திருப்பது உள்ளிட்ட கவர்ச்சிகரமான படங்களைப் பதிவிட்டுவருகிறார். இதற்கு லைக்குகள், கமெண்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இருப்பினும் சில ரசிகர்கள் பூஜாகுமாரின் இந்தப்படங்களுக்காக அவரைக் கலாய்த்து கமெண்டுகளைப் பதிவிடுகின்றனர். அவருக்கு வயதாகிவிட்டதாகவும் இந்த வயதில் ஏன் இது போன்று புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon