மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மனைவியைக் களமிறக்கிய நவாஸ்!

மனைவியைக் களமிறக்கிய நவாஸ்!

இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லாவற்றிலும் எதிரெதிர் என்று சொல்லப்பட்டாலும், அரசியல்வாதிகள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.

பனாமா பேப்பர் ஊழல் வழக்கு காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அண்மையில் நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரதமர் பதவியோடு அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது. இதனால் நவாஸ் ஷெரீப்பின் தொகுதியில் அவரது மனைவி கல்சூம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த நடவடிக்கை நவாஸின் கட்சிக்குள்ளும் மற்ற கட்சியினர் இடையேயும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் பகுதியை உள்ளடக்கிய நவாஸ் ஷெரீப்பின் என்.ஏ.120 தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில்தான் நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் அவரது மனைவி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இவருக்குப் போட்டியாக பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கனைன் மனைவி யாஸ்மின் ரஷீத்தும் போட்டியிடுகிறார்.

முதலில் இத்தொகுதியில் நவாஸின் தம்பி களமிறங்குவதாக தகவல்கள் வந்தன. ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இப்போது தனது மனைவியையே களமிறக்கியுள்ளார் நவாஸ். இடைத்தேர்தலில் தனது மனைவி கல்சூமை எப்படியாவது வெற்றிபெற வைத்து அவரையே பிரதமர் ஆக்கி, மீண்டும் அதிகாரத்தை எல்லாம் தன் கைப்பிடிக்குள் கொண்டுவர நவாஸ் ஷெரீப் திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் பிரசாரத்திலும் இதையே முன்வைக்கின்றன.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon