மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

சாய் பல்லவியைத் துரத்தும் தயாரிப்பாளர்கள்!

சாய் பல்லவியைத் துரத்தும் தயாரிப்பாளர்கள்!

தமிழ்ப்பெண்ணான சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து தமிழ், மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ‘ஃபிடா’ படத்தில் நடித்ததுடன் டப்பிங் பேசி தெலுங்கு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் அந்தப் படத்தில் சாய் பல்லவி ஏற்று நடித்த பானுமதி கேரக்டரும், தெலுங்கு பேச்சும், டான்ஸூம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சாய் பல்லவியின் முதல் தெலுங்கு படமான ‘ஃபிடா’ திரைப்படம் இதுவரை 40 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

படவாய்ப்பைத் தொடர்ந்து ஷாப்பிங் மால், நகைக்கடை திறப்பு விழாக்காகப் பெரும் தொகை கொடுக்கத் தயாராகி அவரைப் பலரும் அணுகி வந்தனர். ஆனால், அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்ட சாய் பல்லவி, “கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அதற்காக என்னை யாரும் அணுக வேண்டாம். மருத்துவமனை, தொண்டு நிறுவனங்களின் திறப்பு விழாக்கள் என்றால் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இலவசமாகவே கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

‘ஃபிடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை 40 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெற்றுவந்த அவர், தற்போது சம்பளத்தை 70 லட்ச ரூபாயாக உயர்த்தி இருக்கிறார். இருப்பினும் பிரபல தயாரிப்பாளர்களும் புதிய தயாரிப்பாளர்களும் சாய் பல்லவியை நாடி வருகின்றனர். இந்த நிலையில் தான் நடிக்கும் படங்களில் பின்னணி பாடவும் முடிவெடுத்து வருகிறார். தற்போது தெலுங்கில் நானியின் 20ஆவது படமான ‘MCA’ படத்தில் நடித்து வருகிறார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon