மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

சாதித்த மனிதநேய அறக்கட்டளை!

சாதித்த மனிதநேய அறக்கட்டளை!

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்பட்டன.

துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி வணிகவரி அலுவலர், மாவட்டப் பதிவாளர்கள் உள்ளிட்ட 74 காலி பணி இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அதில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது.

இதன்பின் வெளியிடப்பட்ட முடிவுகளில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் மற்றும் தனப்பிரியா ஆகியோர் முறைப்படி இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் முதல் மூன்று இடங்களைப் பெற்ற இந்த மூவருமே சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை மூலம் பயின்றவர்கள் என்பதுதான். வெற்றி பெற்ற இம்மூவரும் மனிதநேய அறக்கட்டளை தலைவரான சைதை துரைசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon