மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

இன்றைய ஸ்பெஷல்: கோஃப்டா கிரேவி

இன்றைய ஸ்பெஷல்: கோஃப்டா கிரேவி

தேவையானவை:

மட்டன் கைமா - கால் கிலோ

கடலை மாவு - கால் கப்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரிக்க மற்றும் தாளிக்க தேவையான அளவு

அன்னாசிப்பூ - 1

வெங்காயம் - 1

தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்

அரைக்க தேவையானவை:

வெங்காயம் - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 4

கிராம்பு - 5

பட்டை - 1

இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை

கடலை மாவை வறுத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை அரைத்துக் கொள்ளவும். மட்டன் கைமாவைச் சுத்தம் செய்து நீரில்லாமல் வடித்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் மீண்டும் ஒருமுறை அடித்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு, அரைத்த விழுதில் பாதி, கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும். கடைசியில் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கிப் போடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கைமாவை உருண்டைகளாக உருட்டி போடவும். சிறு தீயில் முக்கால் பாகம் வேக வைத்து எடுக்கவும். இதுவே கோஃப்டா. பின் அரைத்த விழுதில் இருக்கும் மீதி இருக்கும் விழுதில் தனியாத்தூள், மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு அன்னாசிப்பூ போடவும். பின் வெங்காயம் தாளிக்கவும். நன்கு சிவக்க பொரிந்ததும் கலந்து வைத்த விழுதை சேர்த்து, விடாமல் கிளறவும் (மசாலா வாசனை நீங்க) பின் பொடியாய் நறுக்கிய கொத்தமல்லி, தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் பொரித்த கோஃப்டாவைச் சேர்த்து சிறு தீயில் 5 நிமிடங்கள் மட்டும் வைத்து இறக்கவும்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon