மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

விளம்பரத்தோடு விழிப்பு உணர்வு: அக்‌ஷய் குமார்

விளம்பரத்தோடு விழிப்பு உணர்வு: அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘டாய்லட் ஏக் ப்ரேம் கதா’ என்ற படம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) வெளியாகவுள்ளது. இதனால் படத்துக்கான விளம்பரப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. படத்துக்கான ட்ரெய்லர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை நினைவுபடுத்தும்விதமாக அமைந்துள்ளது. சுகாதாரம், தூய்மையான இந்தியா ஆகிய முழக்கங்களை முன்வைக்கும் இந்த படம் மூலம் அக்‌ஷய் குமார், மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதை முற்றிலும் மறுத்துள்ளார் அக்‌ஷய் குமார்.

தொடர்ந்து, ‘பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு ஆதரவான படங்கள் நடிப்பீர்களா?’ என நடிகர் அக்‌ஷய் குமாரிடம் கேட்டபோது, “எனக்குக் கதை பிடித்ததால் இந்தப் படத்தில் நடித்தேன். யாரும் கேட்டுக்கொண்டதால் அல்ல. நமது பிரதமர் பதவியேற்றதும் தூய்மை இந்தியா பற்றி பேசியது வேறு. இந்தப் படத்தின் கதை அவரது திட்டத்தைப் பேசுவது போல இருக்கும். ஆனால், பொதுவில் தூய்மை இந்தியா என்பது அவர் ஆரம்பித்த விவாதம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்டிருக்கும் விஷயம் அது. நமது சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக வைத்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். இது வெறும் கிராமங்களில் மட்டும் இருக்கும் பிரச்னை என்று நினைத்தால் அது தவறு. நகரங்களிலும் இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon