மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

எண்ணெய் வித்துகள், தானியங்கள் சாகுபடியில் சரிவு!

எண்ணெய் வித்துகள், தானியங்கள் சாகுபடியில் சரிவு!

எண்ணெய் வித்துகள் மற்றும் தானியங்கள் சாகுபடி சரிவடைந்துள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் எண்ணெய் வித்துகள் மற்றும் தானியங்களின் சாகுபடி நிலப்பரப்பு ரீதியாக அதிகரித்திருந்தாலும், உற்பத்தி ரீதியில் சரிவடைந்துள்ளது. இந்தாண்டில் 943.45 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்துகள் மற்றும் தானியங்கள் பயிரிடப்பட்டது. இருப்பினும் இப்பயிர்களின் சாகுபடி சரிவடைந்துள்ளதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ள தகவல் அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 936.95 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.

சோயா பீன்ஸ் மற்றும் நிலக்கடலையின் விலை குறைந்ததால், சிறிய அளவில் எண்ணெய் வித்துகளைப் பயிரிட விவசாயிகள் முடிவு செய்தனர். போதிய மழை இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் கேழ்வரகு மற்றும் மக்காச்சோளம் சாகுபடிக்கான நிலப்பரப்பு குறைக்கப்பட்டது. 154.29 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் வித்துகள் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த வருடத்தில் 171.15 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டது. 167.50 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டிலோ 169.98 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டது. நிலக்கடலை சாகுபடிக்கான நிலப்பரப்பு 13 சதவிகிதமும், சோயா பீன்ஸ் சாகுபடிக்கான நிலப்பரப்பு 9 சதவிகிதமும் சரிந்துள்ளது.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon