மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

அதிமுக-வை பாஜக இயக்கவில்லை!

அதிமுக-வை பாஜக இயக்கவில்லை!

“அதிமுக அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்று ஸ்டாலின் கூறுவது, அவரது குழப்பமான மனநிலையையே காட்டுகிறது” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின்மீது தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று முன்தினம் கூறியதை பார்க்கையில், அவரது கருத்தில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது தெளிவாக தெரிகிறது.

பாஜக-வின் தேசியத் தலைவர் அமித்ஷா, வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவும், கட்சித் தொண்டர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்துவதற்காகவும் அவர் தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக-வை ஒருபோதும் பாஜக இயக்கவில்லை. அதற்கான அவசியமும் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது” என்று அவர் கூறினார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon