மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

கோதுமை இறக்குமதி: வரி உயர்த்தப்படாது!

கோதுமை இறக்குமதி: வரி உயர்த்தப்படாது!

‘கோதுமை இறக்குமதிக்கான வரியை உயர்த்த திட்டமில்லை’ என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-17 பயிர்க்காலத்தில் 97.44 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது. விளைச்சல் அதிகமாக இருந்ததால், இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோதுமை இறக்குமதிக்கு மார்ச் 28ஆம் தேதி 10 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நான்கு மாதங்களுக்குக் கோதுமை இறக்குமதிக்கு வரி எதுவும் விதிக்கப்படவில்லை. மார்ச் மாதம் வரையில் முழு சுங்கவரி விலக்குடன் 5.5 மில்லியன் டன் கோதுமையைத் தனியார் வணிகர்கள் இறக்குமதி செய்துள்ளனர்.

சர்வதேச அளவில் கோதுமையின் விலை அதிகரித்துள்ளது. சுங்க வரி விதிக்கப்பட்ட பிறகு கோதுமை இறக்குமதிக்கான வரி உயர்த்தப்படவில்லை. 2016-2017ஆம் பயிர்க்காலத்தில் 30.8 டன் கோதுமையை அரசு கொள்முதல் செய்துள்ளதால், அரசிடம் கோதுமை இருப்பு போதுமான அளவுக்கு இருக்கிறது. மொத்த விற்பனை சந்தைகளிலும் கோதுமையின் விலை கிலோவுக்கு 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உள்ளது.

இதுகுறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோதுமை இறக்குமதிக்கான வரியை உடனடியாக உயர்த்த திட்டம் இல்லை. உள்நாட்டுச் சந்தையில் கோதுமை விநியோகம் போதுமான அளவுக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon