மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

குமரனும் சுகுமாரும்

 குமரனும் சுகுமாரும்

சுகுமார் தாயை இழந்தவன். சிறு வயது முதலே தந்தை குமரன் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். சுகுமார் பிறந்த உடனே அவனது தாயார் இறந்துவிட்டார். குமரனுக்குத் திருமணமாகி இரண்டே வருடங்கள்தான் கழிந்திருந்தன. அனைவரும் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள். ஆனால் அடியோடு மறுத்துவிட்டார் குமரன். தன் மகனுக்காக வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டார். இப்போது சுகுமார் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டான். தந்தையையும் மகனையும் பார்க்க அண்ணன் தம்பிபோல் இருந்தார்கள். இருவரும் பழகுவதும் அப்படித்தான். சுகுமார் தந்தையிடம் மனம் விட்டு பேசுவான். எதையும் மறைக்கமாட்டான். குமரனும் அப்படியே… இருவரும் எந்த நேரமும் சிரிப்பும் பேச்சுமாக இருப்பதைப் பார்த்து குமரனின் தாயார் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார். இதைப் பார்க்க அந்த மகராசிக்குக் கொடுத்து வைக்கலியே.. என்று அழுவார்.

சுகுமாரும் குமரனும் தெருவில் இறங்கி நடந்தால் ஊரே வேடிக்கை பார்க்கும். “அப்பனும் புள்ளையும் இருந்தா இப்படி இருக்கணும் “ என்பார்கள். குமரன் வெளியூருக்கு மகனை அழைத்துச் சென்றார் என்றால் முன்பின் தெரியாதவர்கள் குமரனிடம், சுகுமாரைக் காட்டி உங்கள் தம்பியா என்று கேட்பார்கள். குமரனும் சிரித்துக்கொண்டே ஆமாம் என்பார். சுகுமாரும் வேடிக்கையாக, ‘அண்ணே.. சொல்லுங்கண்ணே..” என்று கூப்பிடுவான். பிறகு இருவரும் தனியே சிரித்துக்கொள்வார்கள். தந்தையும் மகனும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துவிட்டு குமரனின் தாய் தினமும் திருஷ்டி சுற்றிப்போடுவார். இருந்தாலும் இப்படி இருக்கக் கூடாது என்று மகிழ்ச்சியாக தனக்குத்தானே கூறிக்கொள்வார்.

சுகுமாரை கல்லூரியில் சேர்க்க வேண்டும். அவன் மேற்கொண்டு எங்கே படிக்க வேண்டும் என்பதைக் குமரன் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் சுகுமார் என்ன விரும்புகிறான் என்று தந்தைக்குத் தெரியாது. எனவே ஒரு மாலைப் பொழுதில் தன் மகனோடு வாசலில் அமர்ந்தார் குமரன்.

“என்ன தம்பி.. மேல என்ன படிக்கிறதா உத்தேசம்..?”

“அண்ணே.. நீங்க சொல்லுங்கண்ணே..” கிண்டலாகச் சொன்னான் சுகுமார். பாட்டியோ விளையாட்டாக விசிறி மட்டையால் பேரனை அடிக்க ஓங்கினார்.

“சுகு நான் சீரியஸா கேட்குறேன்…. என்ன படிக்க விரும்புறே..”

“குமரா.. நானும் சீரியஸாத்தான் சொல்றேன். நான் என்ன படிக்கணும்னு நீயே சொல்லு” குறும்பாகப் பேசினான் சுகுமார்.

“டேய் விளையாண்டது போதும். உங்க அப்பன் கேட்குறதுக்கு ஒழுங்கா பதில் சொல்லு” பாட்டி செல்லமாக கோபம் கொண்டாள்.

“அப்பா.. நான் என்ன படிக்கணும்னு நீ தான் சொல்லணும்..”

குமரன் சற்று நேரம் யோசித்தார்.

“உனக்குன்னு விருப்பம் எதும் இல்லையா சுகுமார்”

“ இல்லாம எப்படி.. இருந்தாலும் உன் மனசு நோகக் கூடாது பாரு.. ”

“அப்போ.. நாளைக்கு நான் கை காட்டுற பொண்ணையே நீ கட்டிக்குவியா?”

“அது கொஞ்சம் யோசனை பண்ணனும்..” யோசிப்பதுபோல் பாவனையோடு செய்தான் சுகுமார்.

“அப்ப உன் படிப்பு பத்தியும் யோசனை பண்ணு..”

சுகுமார் சற்றே யோசனையோடு சொன்னான்.

“அப்பா எனக்கு கோயம்புத்தூர் தனலெட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்ல பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசை.. ஆனா உன்னை கஷ்டப்படுத்த விரும்பல..” தயக்கத்தோடு சொன்னான்.

“இதுல நான் கஷ்டப்பட என்ன இருக்கு.. ?”

“இல்லப்பா அந்த காலேஜ் ரொம்ப பெரிய காலேஜ்.. அங்க படிக்கிறவங்களுக்கு உடனே வேலை கிடைக்குதாம். பெரிய பெரிய கம்பெனிகள் கேம்பஸ் இன்டர்வ்யூ வச்சு வேலைக்கு ஆள் எடுக்கிறாங்களாம். ஆனா பீஸ் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியல” என்றான் சுகுமார்.

“கவலையே படாத அப்பா உன்னை அங்கேயே படிக்க வைக்கிறேன். அப்புறம் கோயம்புத்தூர் தனலெட்சுமி சீனிவாசன் காலேஜ் பத்தி நானும் விசாரிச்சு வச்சிருக்கேன். அங்க நியாயமான பீஸ்தான் வாங்குறாங்க. உலகத் தரமான தொழில் நுட்பக் கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கிறதுதான் அவங்க பிரதான நோக்கம்.. நீ அங்கயே படி” என்றார் குமரன்.

தொடர்பிற்கு

Dhanalakshmi Srinivasan College of Engineering

• NH-47 Palakkad Main Road,
• Navakkarai Post,
• Coimbatore -641 105.
• Phone : 0422 2930640,2935353
• Mobile : 9750956740, 50
• Email : [email protected]

விளம்பர பகுதி

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon