மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தங்கவேலுவின் பிரச்சினை தீர்ந்தது

 தங்கவேலுவின் பிரச்சினை தீர்ந்தது

தங்கவேலுவும் மகேஸ்வரியும் மனமொத்த தம்பதிகள். எந்த முடிவு எடுத்தாலும் இருவரும் இணைந்தே எடுப்பார்கள். தங்கவேலு இதுநாள் வரை சிங்கப்பூரில் வாழ்ந்துவந்தார். அவர் அங்கே சம்பாதித்த அனைத்தையும்மனைவிக்கு அனுப்பிவைத்தார். அதைப் பத்திரமாக சேமித்துவைத்தார் மகேஸ்வரி.

ஆனால் அப்படிப் பணத்தை வெறுமனே சேமித்து வைப்பதில் பயனில்லை என்று மகேஸ்வரின் அண்ணன் கூறினார். இதுகுறித்து தன் கணவனோடு விவாதித்தார் மகேஸ்வரி. அப்போது தங்கவேலு, “உன் அண்ணன்சொல்வதும் சரிதான். பணத்தை நிலத்தில முதலீடு செய்யலாம். நான் எத்தனை நாளைக்குதான் சிங்கப்பூர்ல இருக்க முடியும். ஊருக்கு வர வேண்டாமா? தோப்பு, வயல் இப்படி எதையாவது வாங்கிப்போடு. உங்கஅண்ணன்கிட்ட நான் பேசுறேன். சரியா?” என்று கேட்டார்.

“நீங்க சொல்றதும் சரிதாங்க. நானும் இன்னிக்கே அண்ணன் கிட்ட பேசுறேன்” என்று சொன்னார் மகேஸ்வரி.

அதேபோல் அண்ணனோடு கலந்து பேசினார் மகேஸ்வரி. இருபது ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கிப்போட்டார். அதன் அருகிலேயே முப்பது ஏக்கர் வயலையும் வாங்கினார். தோப்பை விட வயல்வெளி விலை மிக மிகக்குறைவாக இருந்தது. அந்த முப்பது ஏக்கர் இடத்திலும் தென்னை பயிரிடலாம் என்று பலரும் சொன்னார்கள். அப்படி நடும் பட்சத்தில் ஐந்தே வருடங்களில் தேங்காய் காய்க்கத் தொடங்கிவிடும் என்று மகேஸ்வரியின்அண்ணன் கூறினார்.

இது குறித்துத் தன் கணவனிடம் ஆலோசனை கேட்டார் மகேஸ்வரி. அதற்கு அவரோ, “இடம் வாங்கிக்கொடுத்தது உங்க அண்ணன்தானே… அவர் சொல்றபடியே செய். ஆனால் நீ தனியா எப்படி இவ்ளோ பெரிய வேலையைச்செய்ய முடியும். 30 ஏக்கர் இடத்தில் தென்னை பயிர் செய்யுறது சாதாரண வேலையில்ல.. நான் ஊருக்கு வந்த பிறகு அந்த வேலையைச் செய்யலாமே...” என்றார். மகேஸ்வரியோ விடாப்பிடியாக, “எப்போ ஊருக்கு வர்றீங்க..?”என்று கேட்டார்.

“பார்த்தியா.. இடம் வாங்கினதும் உன்னால சும்மா இருக்க முடியல. அதுக்குதான் பணத்தை சும்மா வச்சிருக்க வேண்டாம்னு சொல்றது. சரி நான் அடுத்த வாரமே ஊருக்கு வர்றேன். என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்” என்றார்.

சொன்னபடியே அடுத்த வாரத்தில் தங்கவேலு ஊர் வந்து சேர்ந்தார். வந்தவர் தோப்பைச் சென்று பார்வையிட்டார். அவருக்கு எல்லையில்லா ஆனந்தம்.

இந்நிலையில்தான் அந்த ஊரில் உள்ள அக்ரி ஆஃபீஸரை தங்கவேலுவும் அவர் மச்சினனும் சென்று பார்த்தார்கள். அவரிடம் தங்களின் பிரச்சனையை எடுத்துச் சொன்னார்கள்.

“ஸார் நான் இருபது நாள் லீவில் வந்திருக்கேன். பத்து நாள் குடும்பத்தோட வெளில போயிடுவேன். பத்து நாள்ல வேலை முடியணும் ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்க…” என்று கேட்டார் தங்கவேலு.

“விஷயம் ரொம்ப சிம்பிள். பாப்காட் (BOBCAT) ஒண்ணை வாடகைக்கு எடுங்க. ஐந்தே நாட்களில் உங்கள் வேலை முடிஞ்சுடும்…” அக்ரி ஆஃபீஸர் சொன்னார்.

“அதெப்படி முடியும்..? நிலத்தை சமன் செய்யணும், அப்புறம் குழி தோண்டணும், அப்புறம் மூடணும்…” சந்தேகமாகக் கேட்டார் தங்கவேலு.

“ஸார் பாப்காட் எழுபது விதமான வேலைகளை மிக வேகமாகவும் துல்லியமாகவும் செய்யும்” என்றார் ஆஃபீசர்.

“பாப்காட் எங்க வாடகைக்கு கிடைக்கும்..? ’‘ தங்கவேலு ஆர்வமாகக் கேட்டார்.

“கோயம்புத்தூரில் MARWELL ENNCON TECH PVT LTD நிறுவனம் இருக்கு. அதோட கிளை நம்ம திருச்சில இருக்கு. அங்கே பாப்காட்டை வாடகைக்கு எடுக்கலாம்” என்றார்.

“அப்போ இப்பவே திருச்சி கிளம்புறோம்” என்று புறப்பட்டார்கள் அவர்கள்.

அணுக வேண்டியது:

21 Shasthiri Nagar, Opp KMCH,
Civil Aerodrome, Sitra, Coimbatore -14
91-422-439 9262
[email protected]

இது தவிர, சென்னை, சேலம், மதுரை, ஓசூர், கேரளாவிலும் கிளைகள் உள்ளன.

விளம்பர பகுதி

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon