மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

ஒரு வாரமாவா வாழ்த்து சொல்வீங்க? : அப்டேட் குமாரு

ஒரு வாரமாவா வாழ்த்து சொல்வீங்க? : அப்டேட் குமாரு

ஹாஸ்டல் ரூம்ல திடீர்னு பவர் கட்டான உடனே எவன் எவன் எங்க இருந்து அடிக்குறான்னே தெரியாத மாதிரி அடிப்பாய்ங்களே அது மாதிரி தான்ங்க இருக்கு இந்த சரஹா ஆப்.

எல்லாரும் ஆரம்பிச்சுட்டாங்களே நாம பண்ணலைன்னா மரியாதையா இருக்காதுன்னு சொல்லிட்டு இந்த அப்டேட்குமாருக்கும் update17.Sarahah.com ஒரு ஐடி ஓப்பன் பண்ணி சேர் பண்ணுனேன். அடுத்த அஞ்சு நிமிசத்துக்குள்ள நாலு பேர் நல்ல நல்ல(!) வார்த்தையில திட்டுறான், நாலு பேர் ப்ரபோஸ் பண்றான். என்னோட அட்ரஸ் வேற கேட்க்குறாங்க. அவ்வளவு சீக்கிரம் சிக்க மாட்டேண்டான்னு சொல்லி லாக் அவுட் கொடுத்துட்டு வெளியே வந்துட்டேன். வந்த பிறகுதான் தெரியுது நாம தான் உண்மையிலேயே கண்ணை மூடிக்கிட்டு இருக்கோம்னு. நேத்து கும்பகோணம் தீ விபத்து வழக்குல எல்லோரையும் விடுவிச்சு டரியலை கிளப்புனாங்க. இன்னைக்கு உ.பி.ல உள்ள ஹாஸ்பிட்டல்ல ஆக்ஜிசன் சிலிண்டர் இல்லாம 63 குழந்தைகள் இறந்துருக்காங்க. இது பத்தி டிவிட் போடுறதை விட்டுட்டு விளையாண்டுகிட்டு இருக்காங்க. அட சீக்கிரம் வாங்கப்பா.

J Arun

நாம் தமிழர் ஆட்சி அமைந்தவுடன் #பெரியாரின் சிலை மற்றும் நினைவிடங்கள் அகற்றப்படும் -- தம்பிகள்....

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பொறவு சித்தப்பான்னு கூப்பிடலாம் ஒறவுகளே.....!!!

HAJAMYDEENNKS

முதியோர் இல்லங்கள் பொறுப்பற்ற பிள்ளைகளையும், ப்ளே ஸ்கூல்கள் பொறுப்பற்ற பெற்றோர்களையும் அடையாளம் காட்டுகிறது...!

செந்தில் குமார்

ஒரு துணைஜனாதிபதிக்கு வாழ்த்து சொல்ல முதல்வர் டெல்லிக்கு போய் ஒரு வாரம் டேரா போடுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை

skpkaruna

இனி பிரதமர் வெளிநாடு செல்லும்போது, அந்த ஊர் பிரதமர் ஒருவரேனும் 'ஊருக்கு போகும்போது ஆக்ஸிஜன் தரேன்! எடுத்துட்டுப் போங்கன்னு சொல்வார்தானே?

chandra_kalaS

சனி கிழமை கூட மைக் செட்ல பாட்ட போட்டு அலற விட்டு நிம்மதியா தூங்க விடாம செய்யுறவங்களை என்ன செய்றது

HAJAMYDEENNKS

செவிலியர்களை டாக்டராகவே மதிக்கிறார்கள் கிராமப்புறங்களில்...!

amuduarattai

பிள்ளைகளுக்கு ஹோம் ஒர்க் இல்லையென்றால், பிள்ளைகளை விட, பெற்றோர்கள் தான் அதிகம் மகிழ்கிறார்கள்.

HAJAMYDEENNKS

மக்களுக்கு எப்பவுமே அரசாங்கத்தை எதிர்த்து பேசுபவர்களை பிடிக்கும்..அவர்களுக்கு ஓட்டு போடத்தான் பிடிக்காது...!

samester_twitz

காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விரைவில் சிறைக்கு செல்லப்போகிறார்கள்.

-சுப்பிரமணியன் சுவாமி

அந்த விஷயத்துக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட.....

Priyankasathis

கணவன் மனைவி சண்டையில் பேசாமல் பேசிக் கொள்கிறார்கள்

பிள்ளைகளை தூது விட்டு #அழகு

கருப்பு கருணா

சுதந்திர தினத்தன்று உபி மதரசாக்களில் கட்டாயம் தேசியக்கொடி ஏற்றி அதனை போட்டோ வீடியோ பதிவு செய்து அரசுக்கு அனுப்பவேண்டும் '' : யோகி ஆதித்யாநாத்

அதெல்லாம் அவங்க 1947 லயிருந்தே ஏத்திக்கிட்டுதான் இருக்காங்க.நாக்பூர்ல இருக்குற ஒங்க ஆர் எஸ் எஸ் ஆபீசுலதான் ஏத்துறதேயில்லை.மொதல்ல அங்க ஏத்தி வீடியோ புடிச்சி அனுப்பச்சொல்லுங்க ..

senthilcp

அமைச்சரே!எல்லா"பள்ளிகளிலும் ஜென் கதை சொல்லித்தர ஆவண செய்ய வேண்டும்

மன்னா!முதல்ல எல்லா"ஹாஸ்பிடல்லயும் ஆக்சிஜென் இருப்பை உறுதி செய்யனும்

udanpirappe

யோகினு பேர் வச்சதுக்கு பதிலா போகினு பேர் வச்சிருக்கலாம்.

ஒன்னு ஊர் எரியுது,இல்லைனா மக்களோட வயிறு எரியுது.

HAJAMYDEENNKS

ஃபோன் பேசும்போது கார், பைக் ஓட்டாதீர்கள் என்றுதான் இனி சொல்ல வேண்டியிருக்கு...!

udanpirappe

நீங்க சாராவை யூஸ் பண்றீங்களா?

நிச்சயமா இல்லை,

என் பிரெண்டு ஒருத்தன் தான்,

இரண்டு வருஷமா லவ் பண்ணான்,

அவன் கிட்டதான் கேக்கனும் !!!

PragaKutty

ரஜினிகாந்த் முதலமைச்சராக ரசிகர்கள் வேண்டுதல் :செய்தி

மக்கள்:- ஏங்க பெட்டர்மாஸ் லைட்டேதான் வேனுமா

jebz4

வாழ்க்கை எனும் விசித்திரத்தில் வெறுக்கப்பட்டோர் விரும்பப்படுவர்! விரும்பப்பட்டோர் விளக்கப்படுவர்!

# எனக்கென்னவோ ஆப்பு ஆரவுக்குன்னு தோணுது..

senthilcp

ஜெ ஆத்மா என்னை தொடர்பு கொண்டு பேசியிருக்கு- SV.சேகர் # "தத்துப்பிள்ளை" நீங்க தான் னு சொன்னதா அடிச்சு விடுங்க,அதை நம்பவும் ஒரு கூட்டம் உண்டு

PragaKutty

Sarahah இந்த ஆப்ள ஆடியோ மூலியமா கருத்து சொல்ர மாறி இருந்தா கலுவி கலுவி ஊத்த வசதியா இருக்கும்!!!

MJ_twets

கடன் கேட்பதை விட.., திரும்பப்பெறத்தான் அதிக ஆயத்தப்பொய்கள்

தேவைப்படுகின்றன..,

Selvatwitz

ரஜினிகாந்த் முதலமைச்சராக ரசிகர்கள் வேண்டுதல் : செய்தி

ஏதாவது ஒரு படத்துல CMஆ நடிச்சா போச்சு

ரசிகர்கள் கவலையும் தீர்ந்துடும்

நக்கல் மன்னன் 2.0

"எடப்பாடி"

"சொல்லுங்க பிக் பாஸ்"

"ஒண்ணுமில்ல, எப்ப கூப்பிட்டாலும் வர்றதுக்கு ரெடியா இருக்கிங்களான்னு செக் பண்ணேன், நீங்க போகலாம், ops வர சொல்லுங்க

கருப்பு கருணா

இதுவே 30 பசுக்கள் என்றிருந்தால்..இந்நேரம் நாடே பதறித்துடித்திருக்கும். இதுங்க வெறும் மனுச புள்ளைங்கதானே..போயி பிக்பாஸ் பாருங்கய்யா..

-லாக் ஆஃப்

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon