மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

கடினமாகும் பொருளாதார வளர்ச்சி!

கடினமாகும் பொருளாதார வளர்ச்சி!

ஏற்கனவே மதிப்பீடு செய்திருந்த 7. 5 சதவிகித வளர்ச்சியை இந்தியா அடைவது மிகவும் கடினமான ஒன்றாகும் என்று அரசின் இரண்டாம் கட்ட பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முதற்கட்ட ஆய்வறிக்கை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அதில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மாற்றங்களால் அது சாத்தியமில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், ‘முதல் ஆய்வறிக்கையில் கூறப்பட்டது போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதம் வரையில் உயர்வதற்கான வாய்ப்பில்லை. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டிருப்பது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்குப் பிறகு சரக்குப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள எளிமை போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஓரளவுக்குச் சீராக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon