மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

ராணுவத்தில் ரோபோக்கள் !

ராணுவத்தில் ரோபோக்கள் !

இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்தப் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக தீவிரவாத தாக்குதலால் ராணுவ வீரர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினரின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் எல்லை பகுதியில் ரோபோக்களை நிறுத்தப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதாவது, ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக ரோபோக்கள் தேவைப்படுவதாக இந்திய ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாதுகாப்பு அமைச்சகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சுமார் 544 ரோபோக்கள் எல்லையில் பயன்படுத்தப்படவுள்ளன. இவை மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்து தாக்கும் என்று கூறப்படுகிறது.

வெடிபொருட்கள், ஆயுதங்களைக் கையாள்வது மட்டுமின்றி தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்காணித்து தகவலினை சேகரித்து அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 200 மீட்டர் தூரம் வரையுள்ள தகவல்களை சேகரிக்கும் திறன் படைத்த இந்த ரோபோக்களில் கேமராக்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் முதலில் ராஷ்டீரிய ரைபிள் படைப்பிரிவால் கையாளப்படும் என்று கூறப்படுகிறது. இந்த முறை வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon