மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

காரீஃப் சாகுபடி அதிகரிப்பு!

காரீஃப் சாகுபடி அதிகரிப்பு!

கடந்த ஒரு வாரத்தில் காரீஃப் பயிர்களின் சாகுபடி 7.43 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் காரீஃப் பயிர் சாகுபடி நிலப்பரப்பு ரீதியாக 7.43 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) வரை 94.35 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் காரீஃப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்த விளைநிலப்பரப்பில் 89 சதவிகிதத்தில் காரீஃப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.69 சதவிகித உயர்வாகும். நிலப்பரப்பு ரீதியாக, நெல், கரும்பு, பருத்தி ஆகியவற்றின் சாகுபடி கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இருப்பினும், பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணய் வித்துகள் ஆகியவற்றின் சாகுபடி சரிவடைந்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் பருத்தியின் தேவை அதிகரித்திருப்பதால், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண் அமைச்சகத்தின் தகவலின் படி, பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பின் விகிதம் கடந்த ஆண்டை விட 18.26 சதவிகிதம் அதிகரித்து 11.71 மில்லியன் ஹெக்டேராக உள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon