மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

உலகின் அதிக வயதுள்ள மனிதர் மரணம்!

உலகின் அதிக வயதுள்ள மனிதர் மரணம்!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் அதிக வயதுள்ள மனிதர் மரணமடைந்தார்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டல். இவருக்கு தற்போது 113 வயது. உலகின் அதிக வயது மனிதராக கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றவர் இவர். 1903ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்த அவர், 114 வயதை நிறைவுசெய்ய இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) உயிரிழந்தார்.

முதலில் இஸ்ரேல் நாட்டின் ஹாய்பா நகரின் ஜர்னோவ் பகுதியில் கிறிஸ்டல் வசித்துவந்தார். அதன் பிறகு 17ஆவது வயதில் போலாந்து நாட்டின் லாட்ஸ் பகுதிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு திருமணம் முடித்து, சாக்லேட் தொழிற்சாலை ஒன்றினை நடத்திவந்தார். பின்னர், அங்கு நடந்த உலகப் போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அப்போரில் தன் மனைவியையும் இரு குழந்தைகளையும் இழந்தார். பின்னர் மீண்டும் 1950ஆம் ஆண்டு மீண்டும் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவியுடன் இஸ்ரேல் நாட்டின் ஹாய்பாவிற்குத் திரும்பினார்.

கிறிஸ்டனுக்கு இரண்டு குழந்தைகளும், 9 பேரன், பேத்திகளும் 32 கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளனர்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon