மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பிக் பாஸ் செல்லும் அடுத்த நடிகை?

பிக் பாஸ் செல்லும் அடுத்த நடிகை?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா விலகியதிலிருந்தே நிகழ்ச்சி களை இழந்துவிட்டது என்று சொல்லலாம். அதை போக்க மற்றொரு நடிகையை நிகழ்ச்சிக்கு கொண்டுவர இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக பிரபலமானவர் ப்ரியா சங்கர். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார். பிந்துமாதவி எண்ட்ரி கொடுத்தது போல் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இது ஆதாரமற்ற தகவல் என அவர் மறுத்துள்ளார்.

இந்த வதந்தி குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ப்ரியா சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘என்னது பிக் பாஸ் வீட்டுக்கு போறேனா? என் வீட்டிலேயே என்னால் 10 நாட்கள் சும்மா இருக்க முடியாது. இந்த பதிவு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே. இந்த வாரம் போகப் போவது நானல்ல. உங்களது அன்புக்கு நன்றி.’ என்று தெரிவித்துள்ளார்.

ப்ரியா சங்கரின் இந்த பதிவால் அவர் பற்றிய வதந்தி முடிவுக்கு வந்ததே ஒழிய அடுத்து உள்ளே செல்லப் போகும் நடிகை யார் என்ற ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon