மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தந்தையும் தனயர்களும்: யுவன்சங்கர் ராஜா

தந்தையும் தனயர்களும்: யுவன்சங்கர் ராஜா

மகத்தான சாதனையாளர்களைத் தந்தையாகக் கொண்டவர்கள் செல்லும்வழிகளெங்கும் தன் தந்தையின் புகழ் மலர்கள் பரவிக் கிடக்கக் காண்பார்கள்.பெருமை மிகு தருணங்களை எதிர்கொள்வார்கள். ஆனால் அவர்களேஅத்தந்தை கோலோச்சிய துறையில் நடைபயிலத் தொடங்கினால், தான்நட்டு வளர்த்த செடியில் பூக்கும் மலர்களிலும் தந்தையின் வாசனைவீசுவதாக பிறர் சொல்லக் கேட்பார்கள். இறங்கிச் செல்லும்பாதைகளெங்கும் தந்தையின் நிழல் விழுந்து கிடக்கக் காண்பதுஅவர்களுக்கு மகிழ்ச்சியையும் கோபத்தையும் ஒருங்கே தரக்கூடும். தன்தந்தை எழுப்பி வைத்திருக்கும் பிரம்மாண்டமான மலையை மீறி அந்தப்பிள்ளைகளின் சூரியன் மேலெழுந்து வந்து ஒளியைப் பரப்புவதுமிகச்சிலருக்கே, ராஜேந்திரசோழனைப் போல.

யுவன் சங்கர் ராஜாவின் தொடக்க கால பாடல்கள் பெரும்பாலும் அவர்தந்தையின் நிழலைப் பின் தொடர்ந்தவையே. பிறகு உலகமயமாக்கல்கொண்டு வந்து சேர்த்த இசையிலிருந்து தன் இசையின் பரிமாணங்களைவளர்த்துக் கொண்டார். ஒரு அர்த்தத்தில் ரஹ்மானைப் பின் தொடர்பவர்எனச் சொல்லலாம். ராஜாவுக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களில் அவர்சாயல் இல்லாமல் இசையமைத்தவர்கள் எவருமில்லை. தமிழகத்தைப்பொறுத்து இம்மதிப்பீட்டை முன்வைப்பதால் என்னால் இதை உறுதியாகசொல்ல முடியும்.யுவனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் யுவனுக்கேஉரிய திறமைகள் வெளிப்படும் பல பாடல்களை இசைக்கோவைகளைஉருவாக்கியிருக்கிறார்.

யுவனின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்ததில் செல்வராகவனுக்கு மிகமுக்கியமான பங்குண்டு. காதல் கொண்டேன் (நெஞ்சோடு கலந்திடு…..), 7ஜிரெயின்போ காலனி (நினைத்து நினைத்துப் பார்த்தேன்….! ஆண் குரலில்) ,புதுப்பேட்டை போன்ற ஆல்பங்களில் உள்ள பாடல்களும் அப்படங்களின்பின்னணி இசையையும் அதைச் சொல்லும். வகைமாதிரிகளும் யுவனிடம்அதிகம்.செல்வராகவனுக்குப் பிறகு இயக்குனர் ராம்.

யுவன் இசையில் ‘மேற்கே மேற்கே தான்..’ (கண்ட நாள் முதல்) போன்றபாடல்களைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். மங்கத்தா படத்திற்கு அவர்அளித்த தீம் மியூசிக் படைப்பூக்கம் நிரம்பியது. அது போலவே யுவனின்காதல் பாடல்களும்.. மேற்கத்திய இசையை யுவன் பயன்படுத்தும்முறையும் அவரிடமிருந்து வரும் மெலடிகளுக்கும் யுவனுக்குப் பெரும்பெயர் பெற்றுத் தந்திருக்கின்றன. இப்பாடலும் அதற்கு விதிவலக்கல்ல.ஆண்டிரியா பாடிய இப்பாடலுக்கு இப்பாடகி அளித்திருப்பது அதினினும்கூடிய மென்மையை.

நன்றி: முகநூலில் எழுத்தாளர் கே.என். செந்தில்

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon