மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தொடர்மழையால் நிரம்பிவரும் மேட்டூர் அணை!

தொடர்மழையால் நிரம்பிவரும் மேட்டூர் அணை!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் பருவமழை அதிகரித்துள்ளதையடுத்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அந்த அணைகளின் தற்காப்பை முன்னிட்டு அவைகளில் இருந்து காவிரிக்கு கூடுதலாக வரும் தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்படுகிறது

அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,249 கன அடியில் இருந்து இன்று காலை 1௦ மணி நேர நிலவரப்படி 8,550 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 41.64 அடியாகவும், நீர் இருப்பு 12.76 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 7,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 1௦௦ அடியாக உயர்வதற்கு இயற்கை ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon