மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

அதிக கட்டண வசூல் குறித்து அமைச்சர் ஆய்வு!

அதிக கட்டண வசூல்  குறித்து அமைச்சர் ஆய்வு!

கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 11) இரவு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டபோது, அதிகக் கட்டணம் வசூலித்த 11 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கினர். இதனைப் பயன்படுத்திப் பல ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணத்தை வசூலித்தன. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை கோட்டப் போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி ஆகியோர் நேற்று இரவு 10 மணி முதல் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அதிகக் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டன. அதிகக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்த ஆம்னி பேருந்துகள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டன.

இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் விடுமுறையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க 980 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon