மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

புரூஸ்லீக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

புரூஸ்லீக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் சேகர் கபூர், புரூஸ் லீயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே எலிசபெத்தின் வாழ்க்கை வரலாற்றை இரு படங்களாக இயக்கி பெரும் வரவேற்பை பெற்றவர். இதில் ‘எலிசபெத்’ திரைப்படம் 1998ம் ஆண்டிலும் ‘எலிசபெத்: தி கோல்டன் ஏஜ்’ 2007ம் ஆண்டிலும் வெளியாகியது. இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ‘லிட்டில் டிராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.

1950களில் ஹாங் காங்கில் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்கள் எப்படி தற்காப்பு கலைகளின் மேதையான புரூஸ்லீயை உச்ச நட்சத்திரமாகவும் நவீன தத்துவவாதியாகவும் மாற்றியது என்பதை இந்த படத்தில் விளக்குகிறார் இயக்குநர் சேகர் கபூர். ‘ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்து என் மகள் காவேரியும் ஒரு பாடலுக்கு இசையமைக்கிறார். ஆனால் அது இந்த படத்திற்கானது அல்ல’ என்று கபூர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். காவேரி ஏற்கனவே ‘டிட் யூ நோ’, ‘ஹாப் அ ஹார்ட்’ ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

லிட்டில் டிராகன் படத்தின் திரைக்கதையை சேகர் கபூரோடு இணைந்து புரூஸ்லீயின் மகளான ஷனோன் லீ எழுதி இப்படத்தை ‘புரூஸ் லீ எண்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon