மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

யார் நம்பர் ஒன் 420 ?

யார் நம்பர் ஒன் 420 ?

அதிமுக-வைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.-க்களுமே 420-தான் என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் நெருக்கடிகளை ஏற்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டு, அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவால், அதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று கடந்த 1௦ஆம் தேதி வியாழக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டியளித்தபோது, எடப்பாடி பழனிசாமியும், அவரது அணியில் இருப்பவர்கள்தான் 420- என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 420 என்ற வார்த்தை தினகரனுக்கே பொருந்தும் என்று நேற்று 11ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் அனைவருமே 420-தான். ஆனால் அதில் யார் நம்பர் ஒன் 420 என்பதில்தான் அவர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகச் சொல்லப்பட்டதற்கும், கமலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கூறினார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon