மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

6 ஆயிரம் கோடி காப்பீடு பெற்ற விவசாயிகள்!

6 ஆயிரம் கோடி காப்பீடு பெற்ற விவசாயிகள்!

காப்பீட்டு நிறுவனங்கள் ’பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6,624.65 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்குக் காப்பீட்டு பலன்களை வழங்கப் பழைய திட்டங்கள் நீக்கப்பட்டுக் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ’பிரதான் மந்திரி ஃபசல் பிமா யோஜனா’ திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2016-17 பயிர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த பிரீமியம் தொகை 22,344.93 கோடி ரூபாயாக உள்ளது. மொத்தம் 15,100.68 கோடி ரூபாய் காப்பீட்டு பலன்களைப் பெற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோரப்பட்டுள்ள தொகையில் 6,446.83 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 6,624.65 கோடி ரூபாய் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17 பயிர்க்காலத்தில் பருவநிலை விவசாயத்துக்கு ஆதரவாக இருந்தது. 2016ஆம் ஆண்டில் சில பகுதிகளைச் சேர்ந்த காரீஃப் பயிர்கள் மற்றும் ராபி பயிர்கள் குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் மதிப்பீடு செய்யவில்லை என்றும் வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon