மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

கதிராமங்கலம் போராட்டம்: 10 பேர் விடுதலை

கதிராமங்கலம் போராட்டம்: 10 பேர் விடுதலை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த 10 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். இங்கே நடைபெற்றுவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தக் கிராமத்தை விட்டு விலகிச் செல்லும் வரை போராட்டம் ஓயாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று கதிராமங்கலத்தில் செயல்படாமல் இருந்த எண்ணெய்க் கிணற்றில் இருந்து கசிவு ஏற்பட்டது. இந்தக் கசிவு அந்தப் பகுதியில் உள்ள வயல் வெளிகளில் பரவ அது அடுத்த நாள் (ஜூலை 1) மக்களுக்குத் தெரியவந்தது. இதனால் கதிராமங்கலம் போராட்டம் மேலும் உக்கிரமடைந்தது.

இந்நிலையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. அந்தத் தீயை கிராம மக்கள்தான் பற்றவைத்தார்கள் என்று போலீஸார் குற்றம்சாட்டியதோடு அந்த மக்கள் மீது கடுமையாகத் தாக்குதலும் நடத்தினர். இதனால் கிராம மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் கதிராமங்கலம் கிராம மக்கள் பலர் காயமடைந்தனர். காவல் துறையினரில் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

கிராம மக்களிடம் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக அப்பகுதியின் பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜன், ரமேஷ் உள்பட 10 பேரைத் தஞ்சை போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு இந்தப் பத்து பேரும் கடந்த 1.7.2017 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட எட்டுப் பேரை விடுவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட எட்டுப் பேரை ஜாமீனில் விடுவிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தர்மராஜன், ரமேஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டுத் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களுக்கும் ஜாமீன் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த 43 நாட்களாகத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட்ட 10 பேரும் இன்று (12.8.2017) காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “உண்மையில் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும். ஊடகங்கள் முன்புதான் இந்த அராஜகம் அரங்கேறியது. கதிராமங்கலத்தில்

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon