மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

நடாலை வீழ்த்திய 18வயது சிறுவன்!

நடாலை வீழ்த்திய 18வயது சிறுவன்!

உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள நடால் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், பல்வேறு சாம்பியன் கோப்பைகளையும் வென்று தற்போது முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்துவருகிறார்.

இவரது சிறப்பான ஆட்டம் மூலம் தொடர்ச்சியாகத் தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றிருந்த நடால், கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 3 தொடர்களில் பட்டங்களை வென்று சாதனை படைத்தார். ஆனால் நடைபெற்றுவரும் ரோஜர்ஸ் கோப்பைத் தொடரில் கடந்த வியாழன் (ஆகஸ்டு 10) அன்று நடைபெற்ற போட்டியில் தரவரிசை பட்டியலில் 143ஆவது இடத்தில் டெனிஸ் ஷபோவலோவ் (Denis Shapovalov) என்ற 18 வயதுச் சிறுவனிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் உள்ள வீரர்களை பின்வரிசையில் உள்ள வீரர்கள் வீழ்த்துவது சாதாரணமானது என்றாலும், சிறந்த பார்மில் இருந்து வந்த நடால் தோல்வியுற்றது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடாலை 3-6, 6-4,7-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மட்டுமின்றி காலிறுதிப் போட்டியில் மற்றொரு முன்னணி வீரர் (Adrian Mannarino) அட்ரியன் மன்னாரியோவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் டெனிஸ் ஷபோவலோவ்.

நாளை (ஆகஸ்ட் 13) நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டருடன் இவர் மோதவுள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon