மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

பாஜகவில் நடிகர் உபேந்திரா!

பாஜகவில்  நடிகர் உபேந்திரா!

திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை பாஜகவுக்குத் தெரிவித்து வரும் நிலையில் தற்போது கன்னட சினிமாவின் பிரபலமான நடிகர் உபேந்திரா, பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் இருப்பவர் உபேந்திரா. இவர் தமிழில், நடிகர் விஷால், நயன்தாரா நடித்த 'சத்யம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவர், அரசியலில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் உபேந்திரா, அந்தத் தகவலை தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இப்போது அவர் அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அது தொடர்பாக தனது நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் மீண்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது நடிகர் உபேந்திரா பேசியுள்ள 15 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அந்த உரையாடலில் மக்கள் பிரதிநிதிகள் நேர்மையாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக, அரசியல் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மக்கள் என்னை நம்ப வேண்டும். பணம் செலவழிக்காமல் என் அதிர்ஷ்டத்தையும், முயற்சியையும் மட்டும் மூலதனமாகக் கொண்டு ஒரு கட்சியை உருவாக்க உள்ளேன். என்று தெரிவித்துள்ளார்

இந்நிலையில் அவர் பாஜகவில் சேர முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் இன்று பெங்களூர் வரும் பாஜக தலைவர் அமித் ஷா, முன்னிலையில் நடிகர் உபேந்திரா பாஜகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon