மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை : வைகோ

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை : வைகோ

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பது ஒரு மாயை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார். திமுக தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த மே மாதம் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ரசிகர்களுடனான சந்திப்பில், தான் அரசியலுக்கு வரப்போவதாக சூசகமாக தெரிவித்திருந்தார். எனவே தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசியல் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும்'என்று தமிழக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் திருச்சியில் இன்று (ஆகஸ்ட்-12) செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,' மத்திய அரசு, தமிழகத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து உதைப்பந்தாய் உருட்டி விளையாடுகிறது. மத்திய அரசு ஆட்டுவிக்கிறபடி தமிழகத்தில் ஆள்பவர்கள் நடந்துகொள்கின்றனர். குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளதால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பலவீனமடைந்துவிட்டதாக கருதக்கூடாது. தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பது ஒரு மாயை. மேலும் இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக' தெரிவித்துள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon