மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

எனக்கு ஹீரோயின் நயன்தாரா: சூரி

எனக்கு ஹீரோயின் நயன்தாரா: சூரி

தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் சூரி. கதாநாயகனுக்கு இணையாகப் பல படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் காமெடியனாக நடித்துள்ள இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

சூரி DECCAN CHRONICLE-க்கு அளித்துள்ள பேட்டியில், “1996இல் சென்னைக்கு வந்தேன். நான் ஓவியம் நன்றாக வரைவேன் என்பதால் நிறைய கலை இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தேன். சினிமாவில் வேலை இல்லாவிட்டால் தி.நகரில் உள்ள ஜவுளிக் கடை ஷோரூம் ஒன்றில் வேலை செய்வேன். என் நகைச்சுவை கலந்த பேச்சுக்காக என் சீனியர் உட்பட பலரும் என்னைச் சுற்றி வருவார்கள். எல்லோரும் என் காமிக் உணர்வுக்காக என்னைப் புகழ்ந்தனர். லிங்குசாமியின் ‘ஜி’ படத்தில் அஜித்துக்குப் பின்னால் நிற்கும் ரோலிலும், ‘காதல்’ படத்திலும் நடித்தேன். சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் நடித்ததின் மூலம் ‘பரோட்டா சூரி’ என்ற பெயரைப் பெற்றேன்” என்று தன் பயணத்தை நினைவுகூர்ந்தார்.

‘நீங்கள் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறீர்களா?’ எனக் கேட்டபோது, நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஒரு நகைச்சுவை நடிகனாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இருக்கிற வேலையை முதலில் ஒழுங்கா பார்க்கணும்னு நினைக்கிறேன் என்றார். அதைத் தொடர்ந்து, ‘ஒருவேளை ஹீரோவாக நடித்தால் எந்த ஹீரோயினுடன் டூயட் பாட ஆசை?’ என்ற கேள்விக்கு, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நடிகை நயன்தாரா உள்பட எல்லா ஹீரோயினோடும் டூயட் பாட ஆசை. ஆனால், எனக்குள்ள ஆசை அவர்களுக்கும் இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்தார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon