மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தினம் ஒரு சிந்தனை: கல்வி!

தினம் ஒரு சிந்தனை: கல்வி!

கல்வியின் வேர்கள் மிகவும் கடினமானவை. ஆனால், அதன் பழம் இனிமையானது.

- அரிஸ்டாட்டில் (கி. மு. 384 - கி. மு. 322). கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டிலின் எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தருக்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகியன இடம்பெற்றிருக்கும். கோல்டன் மீன், அரிஸ்டோடெலியன் லாஜிக், சில்லோஜிசம், ஹெக்ஸிஸ், ஹைலோமார்பிஸம், தியரி ஆஃப் த சோல் ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க கருத்துகள். 170 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், லத்தீன், சிரியா, அரபு, இத்தாலியம், பிரான்சியம், ஹீப்ரு, ஜெர்மானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் மிகச் சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon