மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு!

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு!

கடந்த 2014-2015ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் நேற்று (ஆகஸ்ட் 11) வெளியிடப்பட்டது.

19 துணை ஆட்சியர்கள், 74 பணியாளர்கள் பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. கடந்த 7ஆம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட் 11) வரை நேர்காணல் நடைபெற்றது.

இந்த நிலையில், அதற்கான இறுதி முடிவுகள் அரசு இணையதளத்தில் www.tnpsc.gov.in நேற்று (ஆகஸ்ட் 11) வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி சுப்பிரமணியம் முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் இரண்டாமிடம் பெற்றுள்ளார். தனப்பிரியா மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon