மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

ட்ரம்ப் கோழி பொம்மை!

ட்ரம்ப் கோழி பொம்மை!

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு முன்னர் அதிபர் ட்ரம்ப்பின் உருவத்தைப்போல் கோழி பொம்மை ஒன்று கடந்த புதன்கிழமை அன்று வைக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்ள மைதானத்தில் சிக்கன் டான் எனப் பெயரிடப்பட்டு ராட்சதக் கோழி பொம்மை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கோழி பொம்மை ட்ரம்ப்பை போலவே, தங்க நிற தலைமுடி கொண்டுள்ளது. இந்தக் கோழி பொம்மையை தரண் சிங் என்பவர் உருவாகியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் உறுதித்தன்மை இல்லாதவர் என்பதை எடுத்துக் கூறவும் வட கொரியாவுடன் தேவையில்லாமல் விளையாடிவருவதைச் சுட்டிக்காட்டவும் காற்று நிரப்பப்பட்ட கோழி பொம்மையை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் வரிசெலுத்தாததைச் சுட்டிக்காட்டுவதற்காக இதற்கு முன்பு ஒருமுறை இதேபோல் பொம்மை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பூங்கா சேவை மற்றும் ரகசிய சேவை மையத்தின் அனுமதி பெற்று 300 அடி உயரமுள்ள இந்த சிக்கன் டான் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இதற்கு முன்னர் ஒருமுறை மட்டும் தேசிய கிறிஸ்துமஸ் மரம் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிக்கன் டான் பொம்மையின் உருவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon