மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

அணிகள் இணைந்தால் அவர்களுக்கு நல்லது!

அணிகள் இணைந்தால் அவர்களுக்கு நல்லது!

‘அதிமுக-வின் இரு அணிகளும் இணைந்தால், அது இரு அணியினருக்கும் நல்லது’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் என இரு அணியினரும் டெல்லியில் உள்ளனர். இரு அணிகளின் இணைப்புக்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறலாம் என்றும் மேலும் தினகரன் நீக்கப்பட்டதால் இரு அணிகளும் விரைவில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (ஆகஸ்ட்-11) துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைச் சந்தித்தபோது தமிழகத்தின் பாரம்பர்யங்கள் குறித்து பேசினார். நாடு முழுவதற்கும் அவர் துணை ஜனாதிபதியாக இருந்தாலும், தமிழகத்தின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. துணை ஜனாதிபதி அரசியலுக்கு அப்பாற்பட்டுள்ளதால், அதிமுக-வின் அணிகள் இணைப்பு குறித்து நான் அவரிடம் பேசவில்லை. அதிமுக-வின் இரு அணியைச் சேர்ந்தவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இரு அணிகளும் ஒன்றுசேர்ந்தால் அது அவர்களுக்கு நல்லது” என்று தெரிவித்தார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon