மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

29 கனிமச் சுரங்கங்கள் ஏலம்!

29 கனிமச் சுரங்கங்கள் ஏலம்!

ரூ.1.56 லட்சம் கோடி மதிப்பிலான மூலங்களைக்கொண்ட 29 கனிமச் சுரங்கங்கள் இதுவரையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய (ஆகஸ்ட் 11) மக்களவையின் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய சுரங்கத்துறை அமைச்சரான பியூஸ் கோயல், “இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா, ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் உள்ள ரூ.1,56,746 கோடி மதிப்பிலான 29 கனிமச் சுரங்கங்கள் இதுவரையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இன்னும் 27 கனிமச் சுரங்கங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்குத் தயாராக இருக்கின்றன” என்றார்.

ஏலத்தில் விடப்பட்ட 29 சுரங்கங்களில், மார்ச் 31 வரையில் மட்டும் ரூ.93 லட்சம் கோடி மதிப்பிலான 21 சுரங்கங்கள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. ஏலத்தை எளிதாக நடத்தும் விதமாக அந்தந்த மாநில அரசுகள் ஐ.பி.எம்., எம்.இ.சி.எல்., எம்.எஸ்.டி.சி., எம்.இ.சி.ஒ.என். மற்றும் எஸ்.பி.ஐ. கேப்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon