மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

தாஜ்மஹால் கல்லறையா? சிவன் கோயிலா?

தாஜ்மஹால் கல்லறையா? சிவன் கோயிலா?

‘தாஜ்மஹால், ஷாஜஹான் கட்டிய கல்லறையா? அல்லது முகலாய பேரரசுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட சிவன் கோயிலா?’ என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய தகவல் ஆணையம், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

தாஜ்மஹால் குறித்த உண்மையை அறியும் பொருட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அய்யங்கார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். பிரபல வரலாற்றாசிரியர் பி.என்.ஓக் மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் சக்ஸ்னா ஆகியோரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தாஜ்மஹால் உண்மையிலேயே ஷாஜஹான் தன் மனைவிக்குக் கட்டிய கல்லறையா? அல்லது முகலாய பேரரசுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட சிவன் கோயிலா?’ எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும், ‘தாஜ்மஹால் குறித்து தெரிந்துகொள்வதற்கு தாஜ்மஹாலின் அனைத்து அறைகளின் வடிவமைப்பையும் ஆராய வேண்டும். அதற்காக மூடப்பட்ட நிலையிலுள்ள அறைகள் திறக்கப்பட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஆய்வு செய்த மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்லூல், ‘உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலின் வரலாற்றைப் பற்றிய சந்தேகங்களை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும். தாஜ்மஹால் வளாகத்துடன் தொடர்புடைய வழக்குகள் தொடர்பாக அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon