மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

கேஸ்டில்: மாநகரின் மையம்...

 கேஸ்டில்: மாநகரின் மையம்...

சென்னையில் டைடல் பார்க், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சோழிங்கநல்லூர் டெக் பார்க், போரூர் டிஎல்எஃப், சிறுசேரி சிப்காட், கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் என பல ஐடி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் சென்னை உட்பட வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு சென்னைக்கு வருபவர்கள் இங்கேயே குடும்பத்தினரோடு வசித்து வருகின்றனர். அதன்படி நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. சுமார் 80 லட்சம் மக்கள் தொகை நிறைந்த சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது இயல்பாகிவிட்டது.

சென்னையில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல் தான். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் சென்னை ஸ்தம்பித்து காணப்படும். பத்து நிமிடத்தில் செல்லக் கூடிய இடத்திற்கு போக்குவரத்து நெரிசலால் ஒரு மணி நேரம் வரை செலவாகிறது. பீச், கோயில்,ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களுக்கு கூட நிம்மதியாக சென்று வீடு திரும்ப முடியாது. விடுமுறை நாட்கள் என்றால் சொந்த ஊருக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு செல்லும் வழிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுண்டு.

எனவே போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு மக்கள் அனைத்து இடத்திற்கும் எளிதாக செல்ல கூடிய ஒரு மையப்பகுதியில் உள்ள வீடுகளை தேர்வு செய்து தங்க விரும்புகின்றனர்.

அதேபோலத்தான் சென்னையில் வேலைக்காகவும் படிப்புக்காகவும் வந்து தங்கியிருக்கும் பெண்கள்... தங்கள் விடுதி போக்குவரத்து சிக்கலை சமாளிக்கும் வகையிலான மையப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் கல்லூரிகளுக்கும், பணியிடங்களுக்கும் குறித்த நேரத்தில் தவறாமல் சென்று சேர முடியும்.

அவ்வாறு அனைத்து இடங்களுக்கும் எளிதில் செல்லக் கூடிய மையப் பகுதியில் விடுதிகள் கிடைத்தாலும், அவை பெண்களுக்கு ஏற்ற சுற்று சூழல் மற்றும் சுகாதார வசதிகளுடன் இருப்பதில்லை. ஆனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள KEH OLIVE CASTLES அனைத்து இடங்களுக்கும் விரைவில் செல்லக் கூடிய மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த விடுதியில் இருந்து சுமார் 4.2 கி.மீ தொலைவில்தான் எழும்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. எனவே விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணிக்க விரும்புவோர் சிரமமின்றி எளிதாக ரயில் நிலையத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது. எழும்பூர் செல்வதற்காக உடனுக்குடன் பேருந்து, ஷேர் ஆட்டோ வசதிகளும் விரைவில் கிடைக்கும் வகையில் உள்ளது. அதேபோல சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) இந்த விடுதியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. அதன்படி கோடம்பாக்கம் வழியாக 30 நிமிடத்தில் சிஎம்பிடி பேருந்து நிலையத்தை அடைந்து விட முடியும்.

மேலும் காக்னிசன்ட், ஹெச் சி.எல், டி.சி.எஸ். உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள டைடல் பார்க் 10 கி.மீ தொலைவிலும், Broad Soft Technologies Private Limited, Softura Private Limited, Olympia Technology Park, உட்பட80க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்களும், தொழிற்பட்டறைகளும் அமைந்துள்ள கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இதுமட்டுமின்றி தி.நகர், பெசன்ட்நகர், தாம்பரம், பூந்தமல்லி, திருப்போரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் எளிதில் செல்லும் வகையில் பேருந்து வசதிகளும் உள்ளன.

போக்குவரத்து வசதிகள் மட்டுமின்றி,வேலை முடிந்தோ,கல்லூரி படிப்பு முடிந்தோ வரும் பெண்கlin மனதிற்கு நிம்மதியளிக்கும் வகையிலும், மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் இந்த விடுதியை சுற்றி பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள KEH OLIVE CASTLES விடுதியில் இருந்து நடந்து செல்லக் கூடிய தொலைவில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உலகிலேயே இரண்டாவது மிக பெரிய கடற்கரையான மெரீனா பீச் உள்ளது.

இதுமட்டுமின்றி சென்னையில் உள்ள முக்கிய இரண்டு ஷாப்பிங் மாலானEXPRESS AVENUE மற்றும் spencer plaza அமைந்துள்ளன. இதுதவிர இந்த விடுதியை சுற்றி பெருமாள், விநாயகர்,துர்க்கையம்மன் உள்ளிட்ட கோயில்களும் உள்ளன. இந்த விடுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலும் தொட்டுவிடும் தொலைவிலேயே உள்ளது.

இத்தனை இடங்களுக்கு எளிதில் செல்லக்கூடிய ஒரு மையப்பகுதியில் அமைந்துள்ள விடுதியின் அருகாமையில் ஸ்டெல்லா மேரிஸ் அறிவியல் மற்றும் கலை கல்லூரியும், பீட்டர்ஸ் சாலையில் நியூ காலேஜும் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி உடல் நிலை சரியில்லாத போது எளிதில் செல்லக் கூடிய அளவில் தனியார் மருத்துவமனைகளும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையும் மிக அருகிலேயே அமைந்துள்ளன.

பார்த்து பார்த்து வீடு வாடகைக்கு எடுப்பது, ஹாஸ்டல் பார்ப்பது எல்லாமே போக்குவரத்து வசதியை வைத்து தான் முடிவுக்கு வருவோம். அந்த வகையில் பெண்கள் எளிதாக வெளியில் சென்று வர கூடிய இடத்தில் உள்ள . KEH OLIVE CASTLES விடுதியில் பெண்களுக்கு ஏற்றவாறு பல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதை நாளை பார்க்கலாம்.......

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
17 பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.
கைப்பேசி எண்: +91 99412 09255, 90947 99255
இ-மெயில் : [email protected]
வெப்சைட்: www.keholivecastles.com

விளம்பர பகுதி

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon