மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சுட்டிப் பெண் அனுராதா

 சுட்டிப் பெண் அனுராதா

அனுராதா ஒரு சுட்டிப் பெண். எந்த நேரமும் ஏதாவது ஒரு குறும்பு செய்து கொண்டே இருப்பாள். குறிப்பாகப் பெற்றோர்களின் கட்டளைக்கு எதிராகக் காரியம் ஆற்றுவதில் கை தேர்ந்தவள் அனுராதா. பெற்றோர்கள் படி என்றால் அனுராதா விளையாடுவாள். விளையாடு என்றால் தூங்குவாள். தூங்கு என்றால் டிவி பார்ப்பாள். இப்படி ஏட்டிக்கு போட்டியாகப் பெற்றோர்களோடு விளையாடுவதில் அனுராதாவிற்கு ஒரு சந்தோஷம். அவள் ஒரே செல்ல மகள் என்பதால் அனுராதா அடிக்கும் கொட்டங்களையெல்லாம் ரசிப்பார் அவள் தந்தை குணசேகர்.

ஆனால், தாய் விஜயாவிற்கு மகளுக்கு அதிகம் செல்லம் கொடுக்கிறோமோ என்ற அச்சம் உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அது தேவையற்ற கவலை என்பது குணசேகருடைய கருத்து. அதை நிரூபிக்கும் விதமாக அனுராதா படிப்பில் ஒரு குறையும் வைக்கவில்லை. எப்போது அவள் படிப்பாள் என்றே தெரியாது. ஆனால், தேர்வில் மிக நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவாள். பாடத்தை ஆசிரியர்கள் நடத்தும் போது அதை அப்படியே மனதில் வாங்கிக்கொள்வாள். அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அந்த அளவிற்கு மிகவும் தெளிவான பெண் அனுராதா.

அனுராதா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டாள். அவளைச் சிறந்த கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்பது அவளுடைய தந்தை குணசேகரனின் எண்ணம். ஆனால், அனுராதா என்ன படிக்கப் போகிறாள்…. அவள் மனதில் என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. கடந்த வருடமே இது குறித்து தன் மகளோடு பேசிப் பார்த்துவிட்டார். ஆனால் அவள் பிடிகொடுக்கவில்லை. “எதையாவது படிக்க வேண்டியதுதான்” என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

தன் மகளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே என்ற கவலையில் ஆழ்ந்து போனார் குணசேகரன். இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தார் குணசேகரன். ஒன்று அவள் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தார் போல் முடிவெடுக்க வேண்டும். இல்லை தன் விருப்பத்தைச் சொல்லி அதை மகளை ஏற்க வைக்க வேண்டும் என்ற முடிவோடு மகளை அழைத்தார். அனுராதாவும் செல்ஃபோனை ஆராய்ந்து கொண்டே வந்து அமர்ந்தாள்.

“அனுராதா விளையாடினது போதும். நான் சொல்றதை கொஞ்சம் கவனமாக் கேளு… மேற்கொண்டு என்ன படிக்கப்போறே..? படிக்கிறதா உத்தேசம் இருக்கா… இல்லை அதுவும் இல்லையா?”

அனுராதா தெளிவாகத் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க..? படிக்காம மாடு மேய்க்கவா முடியும்”

“மேய்க்கலாம் தப்பு எதுவும் இல்ல. என்ன பண்ணப் போறோம்னு முடிவு எடுக்கணும்ல.”

“நான் ஏற்கெனவே முடிவு எடுத்துட்டேனே..?”

குணசேகரன் அதிர்ந்து போனார்..

“என்ன முடிவுமா அது.. நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?”

“உங்களுக்குச் சொல்லாமலா.. நான் பிஇ சிவில் இன்ஜியரிங் படிக்கப்போறேன். தாஜ்மகால் மாதிரி ஒரு கட்டிடத்தை கட்டுறதுதான் என் ஆம்பிஸன்”

“என்னம்மா விளையாடுறியா?”

“இதுல விளையாட என்னப்பா இருக்கு. ஏன் பொண்ணுங்க சிவில் படிக்கக் கூடாதா? இல்லை தாஜ்மஹால்தான் கட்டக் கூடாதா.. நான் சிவில் இன்ஜினியரிங்தான் படிக்கப்போகிறேன்“.

“அந்த அளவில் ரொம்ப சந்தோஷம். எங்க படிக்கிறதா இருக்கிற.. நம்ம ஊர்லயே ஏதாவது ஒரு காலேஜ் பாத்திடவா.. இல்லை அதையும் நீயே முடிவு பண்ணிட்டியா?”

“அந்தக் கவலையும் உங்களுக்கு வேணாம்ப்பா. கோயம்புத்தூருக்குப் போய் படிக்கப்போகிறேன்..”

“தனியா இருந்துருவியாம்மா..?”

“நிச்சயமா.. இருந்துதானே ஆகணும்.. கோயம்புத்தூர் பக்கத்தில அரசம்பாளையம் இருக்கு. அங்கதான் எஸ்விஎஸ் இன்ஜினியரிங் காலேஜ் இருக்கு. ரொம்ப அருமையான காலேஜ்ப்பா அது. உலகத் தரத்தில் தொழில் நுட்ப கல்வியை கிராமப் புற மாணவர்களுக்கும் தரணுங்கிற சேவை நோக்கத்தில் தொடங்கப்பட்டது அந்தக் கல்லூரி. நோ டொனேஷன்.. நோ எக்ஸ்ட்ரா பீஸ். ஸோ உங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்காது. ஹாஸ்ட்லும் ரொம்ப அருமையா இருக்காம். என் சீனியர் அங்கதான் படிக்கிறாங்க. ”

“ரொம்ப நல்லதும்மா. நாளைக்கே எஸ்விஎஸ் காலேஜுக்கு புறப்படுவோம். பிரபா அங்கிலும் அந்த காலேஜ தான் ரெஃபர் பண்ணியிருந்தார். உன்னோட செலக்ஷன் ரொம்ப நல்ல செலக்ஷன்”

தந்தையும் மகளும் சிரித்தார்கள்.

அடுத்த பதிவில் பாரியின் கதையை அறிவோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

எஸ்.வி.எஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்
பொள்ளாச்சி மெயின் ரோடு, ஜே.பி. நகர்,
அரசம்பாளையம், கோவை, தமிழ் நாடு - 642109
தொலைபேசி எண்: 0422 2619300 – 309
கைப்பேசி எண்: +91 9047049993 / 9047049996
தொலைநகல் எண்: 0422 2619306
மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon