மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

மண மண்டபம் கட்டிய மக்கள் நலத் தொண்டர்!

 மண மண்டபம் கட்டிய மக்கள் நலத் தொண்டர்!

வீட்டை கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது நம் ஊரில் புழங்கும் பழமொழி.

பொருளாதாரத்தில் கொஞ்சம் ஸ்திரமானவர்கள் கூட ஆடிப்போகும் சூழல் எது என்றால் தங்கள் மகளின் திருமணத்தின்போதுதான்,

சேர்த்து வைத்த சொத்தை விற்பார்கள், அல்லது ஓய்வு பெற்ற பின் பெற்ற பணப் பலன்கள் முழுவதையும் பெண்ணின் திருமணத்துக்கு செலவு செய்து அதற்கு மேல் கடனும் வாங்குவார்கள்.

இதெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர், மேல்தர வர்க்கத்தினரின் நிலைமை. இவர்களுக்கே இப்படி என்றால் சாதாரண மக்களின் கதி?

இன்று சென்னையில் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் திருமண மண்டப வாடகையைக் கேட்டீர்கள் என்றால் அந்தத் தொகையை வைத்து தங்கள் வாழ்க்கையிலேயே செட்டில் ஆகிவிடலாம் அந்தத் தம்பதியர். அவ்வளவு ரூபாய் வாடகை கேட்கிறார்கள். மிகச் சாதாரணமான மண்டபங்கள் கூட ஒரு லட்சம் ரூபாய் வாடகையில்தான் தொடங்குகின்றன.

ஆனால் இந்த மண்டபங்களில் அடுத்தவர் வீட்டுத்

திருமணங்களுக்குப் போய் ஆசீர்வதித்துவிட்டு பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வருவதே சாதாரண மக்களால் முடியும் காரியமாக இருக்கிறது.

‘இதேபோன்ற ஒரு மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்ட மேடையில்… எதிரே பல நூறு நாற்காலிகள் போடப்பட்ட ஹால் இருக்க… குழந்தைகள் ஓடி விளையாடித் திரிய மணமகன் அறை, மணமகள் அறை என்று இருக்க… இப்படிப்பட்ட மண்டபங்களில் நம் வீட்டுத் திருமணங்களும் நடக்குமா?” ஏன்ற ஏக்கப் பெருமூச்சுவிட்டுக்கொண்டே அவர்கள் வெளியே செல்கிறார்கள்.

ஏழைகள் வீட்டுப்பெண்களும் இதுபோன்ற திருமண மண்டபங்களில் தங்கள் கல்யாணம் நடப்பதாக கனவில் காட்சியைப் பொருத்திக் கொண்டே கண்களை ஈரமாக்கிக் கடந்துவிடுகிறார்கள்.

இன்றும் எத்தனையோ செய்தித் தாள்களில் நாம் பார்க்கிறோம். மண்டப வாடகை தராததால் கல்யாணம் நின்றது, திருமண மண்டப பாக்கியால் வெளியேற்றப்பட்ட பெண் வீட்டார் இப்படிப்பட்ட செய்திகளைப் பார்க்கும்போது மனம் கலங்கிவிடுகிறது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு திருமணம். அவள் தனது வயோதிகம் வரை நினைத்து நினைத்து மகிழவும், பேசிப் பேசி பெருமைப்படவுமான நிகழ்ச்சி திருமணம்தான். அன்றைய திருமணங்கள் கோயில்களில் எளிமையாக நடந்தன. ஆனால் இன்றைய திருமணங்கள் எளிமையாக நடந்தாலும் விருந்து போன்ற அம்சங்களுக்கு மண்டபங்கள் முக்கியம் ஆயிற்றே.

இந்த வகையில் ஏழைப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து இன்புறுவதற்கான, தங்கள் மலரும் நினைவுகளை சுகமாக மாற்றுவதற்கான விஷயங்களை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்திருக்கிறார் சைதை துரைசாமி,

ஆம்… சென்னை வேளச்சேரியில் அவர் கட்டியிருக்கும் திருமண மண்டபம்தான் சைதை துரைசாமியை… ஏழைப் பெண்களின் மானசீகத் தகப்பனாக மாற்றியிருக்கிறது.

சென்னை வேளச்சேரியில் இருக்கும் தனக்குச் சொந்தமான 12 கிரவுண்டு நிலத்தில் திருமண மண்டபம் ஒன்றைக் கட்டினார் சைதை துரைசாமி. முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு வாடகைக்கு விட்டு கோடி கோடியாய் சம்பாதிப்பதற்கா? இல்லை.

திருமணம் என்ற வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வை பொருளாதார நெருக்கடிகளால் முடக்கிப் போடும் சாதாரண குடும்பங்களை… அந்த நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும் விதமாக சைதை துரைசாமி கட்டிய இலவச திருமண மண்டபம்தான் இது.

‘புரட்சித் தலைவி அம்மா திருமண மண்டபம்’ என்று பெயரிட்டிருக்கும் இந்த மண்டபத்தை 2006-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.

அன்றைய தினம் ஜெயலலிதா அவர்கள் பேசியபோது,

திரு சைதை துரைசாமி அவர்களுக்கு ஒரு பட்டத்தை இயல்பாகவே சூட்டினார்

‘மக்கள் நல தொண்டர் திரு. சைதை துரைசாமி அவர்களால் கட்டப்பட்டுள்ள ஏழைகளுக்கான இந்த இலவச திருமண மண்டபத்தை திறந்து வைப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்பதுதான் அந்த திருமண மண்டப திறப்பு விழாவில் ஜெயலலிதா பேச்சின் முக்கியமான அம்சம்.

கட்சியிலுள்ள எவருக்கும் அடைமொழி கொடுத்துப் பேசி பழக்கப்படாத ஜெயலலிதா, சைதை துரைசாமிக்கு இப்படி ஒரு அடைமொழிப் பட்டத்தை அளித்துப் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது,

மக்கள் நல தொண்டர் என்று சைதை துரைசாமி அவர்களுக்கு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் சூட்டப்பட்ட புகழாரத்துக்கு முற்றிலும் பொருத்தமானவர்தான் சைதை துரைசாமி அவர்கள்.

திருமண மண்டபத்தைத் திறந்து வைக்க வருகை தந்த ஜெயலலிதா மண்டபத்தைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியம் அடைந்தார்,

நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடம், 200 பேர்களுக்கு மேல் அமர்ந்து உணவு அருந்தக் கூடிய ஹால், 300 பேர்களுக்கு மேல் அமர்ந்து பார்க்கும் வகையில் நிகழ்ச்சிக் கூடம், சமையல் பாத்திரங்கள், மண மேடைக்குத் தேவையான

அலங்கார பொருட்கள், மண்டபத்துக்குத் தேவையான மின்சாரக் கட்டணம், சாமியானா பந்தல், ஒலிபெருக்கிகள், மேஜைகள், நாற்காலிகள், சிறந்த குடிநீர் வசதி இப்படி அனைத்து வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படுகிற, இந்தத் திருமண மண்டபத்தை தன் கையால் திறந்து வைத்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா… மேடையில் பேசிவிட்டு விடைபெற்றுச் செல்லும்போது சைதை துரைசாமியை அருகே அழைத்து…

‘யு ஆர் கிரேட் துரைசாமி. ரொம்ப நல்லா பண்ணிருக்கீங்க. தொடர்ந்து இதை செய்யுங்க’ என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்,

அம்மாவின் வாழ்த்துகளோடு இன்று வரை ஒரு நாளைக்கு இரண்டு , மூன்று நிகழ்ச்சி என்று இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருகிறது. இவ்வாறு சென்னையில் பல இலவசத் திருமணங்கள் நடப்பதற்கான கோயிலாகத் திகழ்கிறது சைதை துரைசாமி அவர்களின், ‘புரட்சித் தலைவி அம்மா இலவச திருமண மண்டபம்’

மனித நேயம் வளரட்டும்...

விளம்பர பகுதி

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon