மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

விமானத்தை மிஞ்சிய வேகம்!

விமானத்தை மிஞ்சிய வேகம்!

Hyperloop One என்ற நிறுவனம் அதிவேகமாகப் பயணிக்கும் Hyperloop என்ற வாகனத்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. ஒருமணி நேரத்திற்குள் சுமார் 1026 கிலோ மீட்டர் தொலைவை கடக்கும் hyperloop முறையானது விமானத்தைக் காட்டிலும் வேகமானது என்று அந்நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

Hyperloop செயல்பாடு குறித்து முன்னரே மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம்.

ஒரு விமானத்தின் அதிகபட்ச வேகம் 965 கிலோமீட்டர் ஆகும். ஆனால் அதைவிட இந்த Hyperloop ஆனது செயல்படுகிறது. சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து CBS என்ற தொலைக்காட்சிக்கு Hyperloop One நிறுவனத்தின் நிறுவனர்கள் Josh Giegel மற்றும் Shervin Pishevar பேட்டியளித்த போது நாங்கள் ரைட் சகோதரர்களை எங்கள் முன்மாதிரியாக வைத்துள்ளோம். அவர்களைப்போல் புதுமையான ஒன்றினை உலகிற்கு அறிமுகம் செய்ய காத்திருக்கிறோம். இந்த முயற்சியை நாங்கள் முழுவதும் முடித்து 2021ஆம் ஆண்டிற்குள் Hyperloop பயன்பாட்டை உலகிற்கு அறிமுகம் செய்வோம். இந்த முறை நடைமுறைக்கு வந்தால் அதன்பின் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு நிமிடத்தில் பயணம் செய்ய முடியும். எனத் தெரிவித்தனர்.

Hyperloop One: Full Scale System Test 5-12-17

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon