மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

இனி நோயாளிகளின் ஜாதகம் பார்த்து சிகிச்சை அளிக்கப்படும்!

இனி  நோயாளிகளின் ஜாதகம் பார்த்து சிகிச்சை அளிக்கப்படும்!

மத்திய பிரதேச அரசு, ஜோதிடர்களை வைத்து புற நோயாளி துறையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு ஜோதிடர்கள் மற்றும் குறிசொல்லுகிறவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

போபாலில் உள்ள மகரிஷி பதஞ்சலி சமஸ்கிருத சன்ஸ்தான் (எம்.பி.எஸ்.எஸ்) என்னும் அரசு நிறுவனத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஜோதிடர்கள் நியமிக்கப்படுவார்கள். ஜோதிடர்கள், வாஸ்து வல்லுநர்கள், வேதவாதிகள் ஆகியோர் வாரத்துக்கு இருமுறை 3 முதல் 4 மணி நேரம் வரை நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களின் ஜாதகங்களை ஆழமாக ஆராய்வார்கள்.

ஆஸ்ட்ரோ- புற நோயாளி துறை என்ற பெயரை மட்டுமே நாங்கள் வழங்கியுள்ளோம். எந்த விதமான சிகிச்சையும் செய்யப்படுவதில்லை.

போபாலில் செஞ்சிலுவை கட்டிடம் அருகே அமைந்துள்ள யோக மைய கட்டிடத்தில் புற நோயாளி துறை செயல்படும். என எம்.பி.எஸ்.எஸ் இயக்குநர் பி.ஆர்.திவாரி தெரிவித்துள்ளார்.

மூத்த மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் இளைய மருத்துவர்கள் பணிபுரிவதை போல, ஜோதிட நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் ஜோதிடர்கள் இந்தத் துறையில் பணிபுரிவார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் எம்.எஸ்.எஸ்.எஸ் நிறுவனத்தால் ஜோதிடம், வாஸ்து மற்றும் பாரோஹீதியா மூன்றாண்டு டிப்ளமோ பாடத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்கீழ் ஜோதிட நிபுணர்கள் ஜோதிடர்களுக்கும், வாஸ்து வல்லுநர்களுக்கும் ஆர்வத்துடன் இந்த பாடத்திட்டங்களை பயிற்றுவிப்பார்கள்.

நோயாளிகள் தங்கள் பிரச்சினைகளை (மருத்துவ, உளவியல் மற்றும் சமூக) ஜோதிடவியல் மூலமாகக் கண்டறிய 5 ரூபாயைப் பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஜோதிடர்கள் நோயாளிகளின் ஜாதகத்தில் பிரதிபலிக்கும் கோள்களின் சேர்க்கைகள் மற்றும் மாற்றங்களைப் படித்து அதற்கேற்றவாறு ஆலோசனை வழங்குவார்கள்.

இந்தத் திட்டத்தை ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அரசு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon