மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

மதுவால் ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க!

மதுவால் ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க!

பெரும்பாலான சாலை விபத்துகள் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுவதால் ஏற்படுகின்றன. மேலும், சாலை விபத்துகளின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்காத இடத்தில் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்துவதன் மூலம் இந்தியாவில் நாள்தோறும் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டி விபத்தில் இறப்பவர்களில் 19 பேரின் மரணத்தை தடுக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்களும் ராஜஸ்தான் காவல்துறையினரும் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுபான கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நீதிமன்ற மீறல் என்று விமர்சிக்கப்பட்டது.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மற்றும் மே 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வின் பிரதான தீர்வு என்னவென்றால், ஓட்டுநர்களுக்கு தெரிந்த மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சோதனை சாவடி, வாகன சோதனை நடத்துவதால், பெரும்பாலானோர் அதை தெரிந்து கொண்டு, மாற்று வழியில் செல்கின்றனர். இதனால், அவர்கள் எதிர்பார்க்காத இடத்தில் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும் என்பதுதான்.

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் செயல்பட்டு வரும் அப்துல் ஜமீல் பாவேர்ட்டி ஆக்‌ஷன் லேப் என்ற பிரிவின் ஆராய்ச்சியாளர்கள் ராஜஸ்தான் காவல்துறையினருடன் இணைந்து மது அருந்துவதால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, 17% சாலை விபத்துகளும், 25% உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 2015 ஆண்டில் 5,01,423 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் 16,298 (3.2%) விபத்துகள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில், 6,755 பேர் இறந்துள்ளனர் மற்றும் 18,813 பேர் காயமடைந்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு, ஒருநாளில் ஒன்பது சாலை விபத்துகள் நடப்பதாகவும், ஒவ்வொரு நிமிடத்துக்கும் 3 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு ஆண்டுகளில் 9% அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அடிப்படையில் 2017 ஜனவரி 9, அன்று இந்தியா ஸ்பேண்ட் தெரிவித்தது.

தற்போது வெளியாகியுள்ள ஆய்வுகளின்படி, ஓட்டுநரின் பிழையால் ஏற்படும் விபத்துகளை விட மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுபவர்களினாலேயே அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அளித்த தகவலின்படி, ஓட்டுநர் பிழையால் ஏற்பட்ட விபத்துகளில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதில் ஏற்பட்ட 2.4 விபத்துகளில் ஒருவர் மரணிக்கின்றார். மலைப்பகுதி சாலைகளில் நடக்கும் 2.9 விபத்துகளில் ஒருவர் மரணிக்கின்றார். மற்ற வாகனங்களை முந்தி செல்லும்போது ஏற்படும் 3.06 விபத்துகளில் ஒருவர் மரணிக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஏப்ரல் 5, 2017 ஆம் ஆண்டு அளித்த தகவலின்படி, மொத்த விபத்துகளில் 15 சதவிகித விபத்துகள் மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 5, ஆம் தேதி இந்திய எக்ஸ்ப்ரஸில் வெளியிட்ட ஆய்வின் படி, 42 சதவிகிதத்தினர் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதால் உயிரிழந்துள்ளனர். அதி வேகத்தில் சென்று ஏற்பட்ட விபத்தில் 33 சதவிகிதத்தினர் உயிரிழந்துள்ளனர். வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 36 சதவிகிதத்தினர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் இணை ஆசிரியர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டேனியல் கென்ஸ்டன், கூறுகையில், ‘ விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினர் தாமதமாக வந்தால் அது மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்தா? என்பதை தீர்மானிக்க கடினமாகவுள்ளது. அதை எளிதாக்க ஒரு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மாவட்டங்களில் 183 காவல் நிலையங்கள் உள்ளன. அதில், 123 காவல் நிலையங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இந்த காவல்நிலையங்கள் சிகிச்சை குழுவாக ("சிகிச்சை நிலையங்கள்" ) உருவாக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தோராயமாக வேறுபட்ட இடங்களில் சிறப்புக் குழுக்கள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை சாலை தடுப்பு வைத்து கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். மேலும், எதிர்பார்க்காத இடங்களில் சோதனைகளை மேற்கொள்வதன் விளைவை தெரிந்து கொள்ள, இந்த காவல் நிலையங்கள் போலீசாரின் உள்ளூர் தலைமைத் தேர்வாளர்களால் தேர்வு செய்யப்பட்ட இடம் அல்லது அதிகளவில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டி வருகின்ற இடத்தில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்தனர். சாலை விபத்துகள், இறப்புகள் மற்றும் இதற்கு போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளை பற்றி தகவலை சேகரிக்க, ஓட்டுநர்கள் எதிர்பாராத தோராயமான இடங்களில் சோதனை சாவடி அமைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தோராயமாக வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மூன்று சிறந்த சோதனை சாவடிகளில் மட்டுமே, இரவு நேரங்களில் நடக்கும் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் மது அருந்தி இருப்பதை கண்டுபிடிக்கும் கருவியை வைத்து சோதனை செய்யப்பட்ட ஒரு இடத்தில்,விபத்துகள் அதிகரித்தன. காரணம், இரண்டு நாட்களில் அந்த வழியாக வரும் ஓட்டுநர்கள், சோதனையை அறிந்து கொண்டு மாற்று வழியில் செல்ல ஆரம்பித்து விட்டனர். இந்த சோதனை மூலம் சிறப்புக் குழுக்கள் குடிபோதையில் வாகனம் ஒட்டியவர்களை பிடித்து அபராதம் விதித்து நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

இதன்மூலம் சிறப்புக் குழுக்கள் ஊக்கத்தொகைகளை பெற்றன. அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்படுவதால், அவர்களுக்கு மூத்த அதிகாரிகளிடமிருந்து நேரடியாக அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும். இரண்டாவது, சிறப்புக் குழுக்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தினர். மேலும்,மற்ற போலீஸ்காரர்களின் வேலை பளுவை குறைத்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon