மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

எனக்கு அதுதான் முக்கியம் : சமந்தா

எனக்கு அதுதான் முக்கியம் : சமந்தா

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் சமந்தா. விரைவில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அவர், இப்போது வரை சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படத்தில் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சமந்தா அளித்த ஒரு பேட்டியில் ‘ உணவு, செக்ஸ் இரண்டில் எது முக்கியம் என்றொரு அதிரடியான கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்கள். அப்போது இது கொஞ்சம் ரிஸ்க்கான கேள்விதான் என்று சொன்ன சமந்தா, உணவு இல்லாமல் கூட என்னால் இருந்திட முடியும் ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது’ என்று தைரியமாக கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களில் திருமணமாக உள்ள நிலையில் சமந்தா அளித்துள்ள இந்த பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon