மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

சினேகாவை வெட்கப்பட வைத்த பிரசன்னா

சினேகாவை வெட்கப்பட வைத்த பிரசன்னா

பிரசன்னா- சினேகா தம்பதியினர் கோலிவுட்டின் அழகான ஜோடி என வர்ணிக்கப்டுகின்றனர். சில படங்களில் இணைந்து நடித்த அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ஒருவரை ஒருவர் பொது இடங்களில் பாராட்டிக் கொள்வது வழக்கம். அதேபோல் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சினேகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரசன்னா ‘ஹேய் சினேகா, உன்னால்தான் சில உயரங்களை எட்டி வருகிறேன். நான் மேலும் அதைத் தொடர என் வாழ்க்கையை இயக்கிச் செல்லவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். அதற்கு ரி-டிவிட் செய்துள்ள சினேகா ’ போடா எனக்கு வெட்கம் வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிவிட்டரில் அவர்களைப் பின்பற்றுபவர்கள் சிறப்பான ஜோடி என வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon