மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

இந்திய கடலில் விலைமதிப்பற்ற உலோகங்கள்!

இந்திய கடலில் விலைமதிப்பற்ற உலோகங்கள்!

இந்திய தீபகற்பத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கனிமங்கள் உள்ளதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்திய தீபகற்பத்தை சுற்றியுள்ள கடல் நீரின் அடியில் பல மில்லியன் டன் அளவுக்கு விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கனிமங்கள் புதைந்துள்ளதாகக் கண்டுபிடித்துள்ளன. 2014ம் ஆண்டு தொடக்கத்தில், மங்களூரு, சென்னை, மன்னார் பள்ளத்தாக்கு, அந்தமான் மற்றும் நிக்கோபர் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை ஒட்டிய கடலின் அடியில் இந்த நீர்வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், 1,81,025 சதுர கிலோமீட்டர் அளவு கடல் பகுதி தொடர்பான உயர்தர தரவை தயாரித்துள்ளது. இதில், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் 10,000 க்கும் மேற்பட்ட மில்லியன் டன் சுண்ணாம்பு மணலுடன் கலந்துள்ளது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூரின் கர்வார் மற்றும் சென்னை கடற்கரை பகுதியில் பாஸ்பேட் வண்டல்கள் உள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா பகுதியில் ஹைட்ரேட் வாயு மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கோபால்ட் உடன்சேர்ந்த ஃபெரோ-மாங்கனீஸ் மேலோடுகள். லட்சத்தீவுகள் பகுதியில் நுண்ணிய மாங்கனீசு முனையங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வகத்தின் புவியியல் மேற்பார்வை நிபுணர் ஆஷிஷ் நாத் கூறுகையில்,” இது தொடர்பான ஆராய்ச்சிக்குச் சமுத்திர ரத்னகர், சமுத்திர கவுஸ்தப் மற்றும் சமுத்திர சவுதிகமா என்ற மூன்று கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்கள் கனிமமயமாக்கலுக்கு சாத்தியமான மண்டலங்களை அடையாளம் காணுதல் மற்றும் கடல் கனிம வளங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதுதான்" என்று தெரிவித்தார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon