மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

தலைவியே வா! தலைமை ஏற்க வா! -அப்டேட் குமாரு!

தலைவியே வா! தலைமை ஏற்க வா! -அப்டேட்  குமாரு!

இன்னைக்கு டிரென்ட்ல இருக்க ரெண்டு போலீஸ் யாருன்னு கேட்டதும், சிங்கம் சூர்யா, மங்காத்தா அஜித்னு சொன்னேன். போயா லூசுன்னு திட்டிட்டு, ஓவியாவை முன்மொழியிறாங்க. பிக்பாஸ் ஷோ-வுக்கு போலீஸ் கெட்டப்ல வந்ததுக்கெல்லாமா போலீஸா அறிவிப்பீங்க. ரூபான்னு ஒரு டிஐஜி மேடம் கர்நாடகாவையே அலறவிட்டிக்கிட்டு இருக்காங்க. அவங்களை டிரான்ஸ்பர் பண்ணத எதிர்த்து சிறை கைதிகள் எல்லாம் போராட்டம் நடத்துவாங்களான்னு யோசிக்கிற அளவுக்கு நிலைமை இருக்குன்னு சொன்னா, அநியாயத்துக்கு நியாயமா இருந்துட்டனேன்னு ரூபா மேடம் திங்க் பண்ணிட்டு இருப்பாங்க. அதே சமயம் ரூபா மேடம் ஃபேமஸ் ஆனது எப்படின்னு தீபா திங்க் பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு அசால்டா தீர்ப்பு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. வாஸ்தவமான பேச்சாத்தான் இருக்குல்ல... எதுக்கும் நான் இன்னொரு தபா திங்க் பண்ணிட்டு வந்துடுறேன் அப்டேட்டைப் படிச்சிடுங்க.

Aiyo_sanda

மகன் கேட்ட கடிகாரத்தை மிட்டாயில் தந்து அழகுப்பார்த்தார்

"ஜவ்வு மிட்டைக்காரர்"

amuduarattai

அழகுக்கு உதவும் என்பதை விட, அடமானத்துக்கு உதவும் என்ற எண்ணத்திலே வாங்கப்படுகிறது ஏழைகளின் நகைகள்.

RJAadhi

அவனால பெண்களுக்கு பாதுகாப்பில்ல-காயு

பரணி ஒரு சேடிஸ்ட்-ஜூலி

அவங்க குடும்பம் பாக்கும். அவங்கள பத்தி இங்க சொல்ல விரும்பலங்க -பரணி @வளர்ப்பு

Aiyo_sanda

கமலை மிரட்டவோ திட்டவோ கூடாது - நாஞ்சில் சம்பத்

தண்ணி பாம்பெல்லாம் படம் எடுக்குதே..!!!

yugarajesh2

ஜனநாயகத்தில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு கமலுக்கு ஆதரவாக OPS கருத்து

இதை கேட்டு கமல் கொஞ்சம் அழுதிருப்பார். நிறைய சிரித்திருப்பார்.

rajakili_twtz

சாணியை மிதிச்சா கால கழுவிட்டு போய்கிட்டே இருக்கனும்..

எருமைகிட்டே போய் இங்கே சாணி போடாதேன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணப்படாது..

saravananucfc

கடந்துவந்தா பாதையை திரும்பி பார்க்கையில் கரடுமுரடு இருக்கலாம்.

நம்மளை நாமே காரி துப்பறே மாதிரி இருக்கக்கூடாது.

ShivaP_Offl

உன்னைப் பாத்து, நீஎதுக்குமே லாயக்கு இல்லாதவனென்று யாராவதுசொன்னா😩

இந்தமேட்டரு"இவனுக்கும் தெரிஞ்சுபோச்சேன்னு தெரிஞ்சிட்டு" ஜாலியா போயிடுங்க

Aiyo_sanda

இப்பெல்லாம் நல்லா இருக்கியானு யாரும் கேக்குறது இல்ல.

4ஜி மொபைல் வச்சிருக்கியானு கேக்குறான்.

இதுதான் டிஜிட்டல் இந்தியாவோ!!

Kozhiyaar

குறைய உன்கிட்ட சொன்னா பொறாமைனு சொல்றே

அடுத்தவன்கிட்ட சொன்ன வயித்தெதெரிச்சல்னு சொல்றே

பின்ன, எப்படித்தான் சொல்றது பொசகெட்டவைங்களா.

rsathish

நல்லா இருக்கியானு கேட்டா ??

பர்ஸ் வீட்ல வச்சிட்டு வந்துட்டேன்னு சொல்றவன் தீர்க்கதரிசி.

mekalapugazh

கூகுளில் எப்படித்தேடுவது என்பதை மட்டும் நான் மறந்துவிட்டால்..

முழுவதும் நினைவற்றவன் ஆகிவிடுவேன்.

ShivaP_Offl

பூமிக்கு வெளிச்சத்தை மட்டும்தான் சூரியன் கொடுத்தது...!

வெப்பத்தை மனிதன்தான் அதிகரித்துக்கொண்டான்...!

ShivaP_Offl

எல்லா கெட்டபழக்கத்தையும் ரெகுலராக கடைபிடிப்பவன், மெடிக்கல்ல போய் தலைவலிக்கு மாத்திரை வாங்கினாகூட, இதுல ஏதும் பக்கவிளைவு இருக்கான்னு கேட்பான்

saravananucfc

பத்து மாமியார்கள் மத்தியில் இருக்கும் மருமகள் நான்- ஆர்த்தி

மக்கள்: நீ அம்மா வீட்டுக்கு கிளம்பு... @பிக்பாஸ்

Sara Sai Ramasamy

மூன்று அழகிய இளம் பெண்களுக்கு ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது...!

அதை அவர்கள் தேய்த்ததும் அதில் இருந்து வெளியே வந்த பூதம் அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டது...!

முதல் பெண்: நான் இப்பொழுது இருப்பதை விட பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள்,,,

உடனே அதிக அழகாகி விட்டாள்...!

இரண்டாவது பெண்: நான் அவளை விட நூறு மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள் அவளும் அழகாகிவிட்டாள்...!

மூன்றாவது பெண்: நான் இவர்கள் இருவரையும் விட ஆயிரம் மடங்கு அதிகமாக வேண்டும் என்றாள்...!

பூதம் யோசித்தது பின் சரி என்று மாற்றியது....

அவள் ஓர் "ஆணாகி" விட்டாள்...!

Morningstar

செய்தி : ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிப்பு.. பெங்களூர் சிறைக்குள் கைதிகள் போராட்டம்

-ஏட்டய்யா கூட தான் போவேன் மொமண்ட்

-லாக் ஆஃப்

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon