மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

கண்ணீரால் கிடைத்த வெற்றி!

கண்ணீரால் கிடைத்த வெற்றி!

லண்டனில் நேற்று (ஜூலை 16) நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெடரர், தனது 8ஆவது விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்மூலம் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார். போட்டி முடிந்த பிறகு சாதனை வெற்றியை பெற்றதற்காக ஃபெடரர் கண்ணீர் விட்டார். அந்த காட்சியை முன்வைத்து பல்வேறு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருந்தனர். அதே அளவில் ஃபெடரருக்கு எதிராக விளையாடிய சிலிச் கண்ணீர் விட்டதைக் கண்டும் பல்வேறு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

அதில் நேற்றைய போட்டியில் முதல் செட்டில் ஃபெடரர் வெற்றி பெற்றதும், சிலிச் அழுவதாகப் பலதரப்பு ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அவரின் பாதங்களின் ஏற்பட்ட காயத்தினால் அவர் கண்கலங்கியதாக இறுதியில் வெளியான வீடியோ தெரிவித்துள்ளது. இருப்பினும் காயம் காரணத்தால் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து சிலிச் விளையாடியதால், அவரை பெரும்பாலானவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், ரசிகர்கள் மனதில் சிலிச் வெற்றிபெற்றுள்ளார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon