மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு!

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு!

இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவடையும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இந்திய விவசாயிகளின் வருமானத்தை வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் இரு மடங்கு உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு இத்துறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாய உற்பத்தியானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. எனவே விவசாயம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டும், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

பசுமைப் புரட்சி காரணமாக இந்தியாவானது கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. ஆனால் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை இந்தியா இன்னமும் இறக்குமதி செய்துதான் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றி, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கடந்த 2016-17 பயிர் பருவத்தில் பருப்பு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது. அதாவது ஜூலை - ஜூன் காலகட்டத்தில் 22.40 மில்லியன் டன் அளவிலான பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் விதைப்புப் பரப்பு அதிகமாக உள்ளது. இதே நிலை நீடிக்குமேயானால் இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்தியா பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.

எண்ணெய் வித்துக்களைப் பொறுத்தவரையில், உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் சுமார் 600 கிரிஷி விக்யான் கேந்திரா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 32.52 மில்லியன் டன் அளவிலான எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன” என்று கூறினார்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon